“ஜகமே தந்திரம்” ஜூன் மாதம் OTT -யில் ரிலீஸ் : தனுஷ் ரசிகர்கள் ஏமாற்றம் | NETFLIX.

தனுஷ் நடித்துள்ள “ஜகமே தந்திரம்” OTT-யில் வெளியாகிறது. ஒரு வருடத்திற்கு முன்பாகவே இப்படம் முடிக்கப்பட்டது.  ஆனால்,அதிதீவிர கொரோனா பரவல் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இதற்கிடையில் பிரபல OTT தளத்தில் படத்தை வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்றது. கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தை இயக்கியிருக்கிறார். நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே ஜகமே தந்திரம் படத்தின் “ஏ புஜ்ஜி” பாடல் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. மேலும் இப்படத்தில் லால் ஜோஸ், கலையரசன், ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், படம் வெளியீடு குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது. Netflix -ல் படம் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. அதேபோல், Netflix -ல் வருகிற ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. ஏற்கனவே, படத்தின் வெளியீட்டு தேதி இரண்டுமுறை அறிவிக்கப்பட்டு பின்னர் மாற்றப்பட்டது. ரசிகர்களும் படத்தை திரையரங்கில் வெளியிட கோரிக்கை வைத்தனர். தனுஷின் விருப்பமும் அதுவாகவே இருந்தது. அனால், தயாரிப்பு நிறுவனம் OTT -யில் வெளியிட முனைப்பாக இருந்தது. அதன்படி படம் ஜூன் மாதம் Netflix-ல் வெளியாகவுள்ளது. இதனை Netflix நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த ஓராண்டாக திரையரங்கில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.  மக்களின் கூட்டமும் வெகுவாக குறையத்தொடங்கியது. பெரிய நடிகர்களின் படங்கள் மட்டுமே ஓரளவுக்கு கூட்டத்தை வரவழைக்கின்றனர். அந்தவகையில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான “மாஸ்டர்” படத்தை கூறலாம். இந்தப்படம் 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்கை நோக்கி மக்களின் கூட்டத்தை இழுத்த படம் என்றே கூறலாம்.
சென்ற வருடம் ஊரடங்கின் போதே ஜோதிகாவின் “பொன்மகள் வந்தாள்”, விஜய்சேதுபதியின் “க/பெ.ரணசிங்கம்,  கீர்த்தி சுரேஷின் “பென்குயின்”, சூர்யாவின் “சூரரை போற்று” போன்ற படங்கள் OTT-யில் வெளியாகின. மேலும், RJ.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவான “மூக்குத்தி அம்மன்” படமும் OTT -யில் வெளியானது.

மேலும் படிக்க:

 

 

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top