SHARES
தனுஷ் நடிக்கும் “கர்ணன்” திரைப்படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் கர்ணன் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது ஒருபுறமிருக்க, தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள “ஜகமே தந்திரம்” திரைப்படம் OTT யில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியாகியுள்ளது.
பிரபல OTT தளமான Netflix -ல் இத்திரைப்படம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை உறுதி செய்யும் விதமாக நேற்று இப்படத்தின் டீசரை தனது யூ டியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது NETFLIX. படத்தின் டீசர் 6 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கி கொண்டிருக்கின்றது. மேலும், 4 லட்சம் லைக்குகளை கடந்து சென்றுகொண்டிருக்கின்றது.

வெளியான டீசரில் தனுஷ் தாறுமாறாக ஆட்டம், பாட்டத்துடன் நடனம் ஆடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இப்படத்தில், தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். மேலும், கலையரசன், சௌந்தரராஜா, வடிவுக்கரசி, ஹாலிவுட் நடிகர் ஜோஜூ ஜார்ஜ், ஜேம்ஸ் காஸ்மோ (James Cosmo) உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில், ஜேம்ஸ் காஸ்மோ என்பவர் நார்னியா, கேம் ஆப் த்ரோன்ஸ் (Game of Thrones) போன்ற படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோஜூ ஜார்ஜ் என்பவர் மலையாளத்தில் வெளியாகி செம ஹிட்டான “ஜோசப்” படத்தின் நாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜகமே தந்திரம் திரைப்படத்தை Y NOT STUDIOS மற்றும் RELIANCE ENTERTAINMENT நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. முதலில், திரையரங்கில் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட இப்படத்தை தற்போது OTT யில் வெளியிடுவது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆனால், இதில் மகிழ்ச்சியளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால் NETFLIX -ல் பல மொழிகளில் உலகமுழுவதும் ஒரே நேரத்தில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் ஆகும். மேலும், 192 நாடுகளில் இப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டே முடிவுற்றநிலையில் கொரோனா காரணத்தால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, தனுஷ் “THE GRAY MAN” ஹாலிவுட் படத்திற்காக அமெரிக்கா சென்றுள்ளது குறிப்படத்தக்கது.
மேலும் படிக்க:
Follow us on :
SHARES