“தி கிரே மேன்” படத்தில் மாஸ் லுக்கில் தனுஷ் : வைரலாகும் புகைப்படம்.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் “கர்ணன்”. ரஜிஷா விஜயன், லால், கௌரி போன்ற பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். அதன் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக  “உட்ராதிங்க யப்போவ்”, மஞ்சனத்தி புராணம் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. படத்தில் தனுஷின் நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது. மேலும், அவர் நடித்து முடித்துள்ள “ஜகமே தந்திரம்” ஹிந்தியில் “அத்ராங்கி ரே” படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. அதுமட்டுமின்றி, கார்த்திக் நரேன் இயக்கம் D43, செல்வராகவனின் “நானே வருவேன்” போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில், தனுஷ் ஹாலிவுட்டில் “THE GRAY MAN” படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தை ஹாலிவுட்டில் “அவென்ஜர்ஸ்” படத்தை இயக்கிய ரூசோ சகோதரர்கள் இயக்குகின்றனர். தனுஷும் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அதன் படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளார் தனுஷ். ஹாலிவுட்டில் காலடி எடுத்து வைத்துள்ள நம் தமிழ் கதாநாயகன் தனுஷுக்கு பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துவந்தனர். தற்போது, படப்பிடிப்பு கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. தற்போது படப்பிடிப்பில் இருந்து சில புகைப்படங்களை தனுஷ் வெளியிட்டுள்ளார். அதில், உடன் நடிக்கும் நடிகையை போனில் போட்டோ எடுத்துக்கொண்டிருக்கிறார் தனுஷ். மற்றொன்றில் உடன் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞருடன் செல்ஃபீ எடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

மேலும் படிக்க:

 

 

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top