கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து…மீண்டும் இணையும்  தனுஷ் – மாரிசெல்வராஜ்.

Dhanush and mariselvaraj join hands again after the huge success of karnan movie

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். கதிர், கயல் ஆனந்தி நடிப்பில் 2018 -ஆம் ஆண்டு வெளியானது இப்படம். அந்த படத்தின் மூலம் இந்திய திரையுலகையே திரும்பி பார்க்கவைத்தவர். குறிப்பாக தமிழக அரசின் குரூப் தேர்வில் பரியேறும் பெருமாள் பற்றிய கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அவரின் இரண்டாவது படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துவந்தது.

Dhanush in karnan poojai stills

அடுத்ததாக, நடிகர் தனுஷை வைத்து “கர்ணன்” படத்தை இயக்க திட்டமிட்டார். அதன்படி, படப்பிடிப்பு கொரோனாவிற்கு முன்னும், பின்னும் நடைபெற்று கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியானது. வெளியான நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவருகிறது இப்படம். முதல் நாளே 11 கோடி ரூபாய் வசூல் செய்தது. சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்களும் செம்ம ஹிட்.

நடிகர் தனுஷ் தனது ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டார் தனுஷ். கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இருவரும் மீண்டும் இணையவுள்ளனர். இந்த தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தனுஷ். கைவசம் அரை டசன் படங்களை வைத்துள்ள தனுஷ் அதையெல்லாம் முடித்துவிட்டு இப்படத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும், இந்த படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்கவுள்ளதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.

dhanush tweet about next movie with mariselvaraj

அதற்கிடையில் மாரி செல்வராஜ் விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து புதிய படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். அதில் அவர் கபடி வீரராக நடிக்கவுள்ளார் என்பது கூடுதல் தகவல். அதனை முடித்துவிட்டு தனுஷ் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் படிக்க:

 

 

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top