‘வேண்டுமென்றே பாதுகாப்பு குறைவான கார்களை தயாரிக்கின்றனர்’

‘வேண்டுமென்றே பாதுகாப்பு குறைவான கார்களை தயாரிக்கின்றனர்’

வாகன தயாரிப்பு நிறுவனங்கள்

வாகன தயாரிப்பு நிறுவனங்கள், வேண்டுமென்றே பாதுகாப்பு தரம் குறைந்த வாகனங்களை இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்வதாகவும்; மன்னிக்க முடியாத இந்த செயலை உடனே நிறுத்துமாறும் மத்திய அரசின் உயரதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த, வாகன பாதுகாப்பு சம்பந்தமான நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சக செயலர் கிரிதர் அரமானி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: 

கிரிதர்-அரமானி

இந்தியாவில் வாகன தயாரிப்பாளர்கள், பாதுகாப்பு தரம் குறைந்தவற்றை வேண்டும்மென்றே பயன் படுத்தி, இந்திய மாடல் கார்களின் தரத்தை குறைப்பதாக கூறப்படும் செய்திகள் குறித்து நான் கவலை அடைந்துள்ளேன். இந்த செயலை நிறுத்த வேண்டும். இது மன்னிக்க முடியாததாகும்.

மிகக் குறைவான உற்பத்தியாளர்கள் மட்டுமே பாதுகாப்பு மதிப்பீட்டு முறையை ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். அதுவும் விலையுயர்ந்த மாடல் கார்களுக்கு மட்டுமே அவற்றைப் பயன்படுத்துகின்றனர் என்பது மிகவும் வருத்தம் தரக்கூடியதாக இருக்கிறது.

வாகன-தயாரிப்பு-43667

பல தர பரிசோதனைகளில், இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களில், வளர்ந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கார்களை விட, உள்நாட்டில் விற்கப்படும் கார்களில் பாதுகாப்பு தரம் குறைவாக இருப்பது தெரியவந்திருக்கிறது. இந்நிலை மாற வேண்டும். என வருத்தம் தெரிவித்தார்.

 

மேலும் படிக்க: 

மினி மாரத்தான் போட்டி|வாசிக்க ஓடுவோம்!

இந்நிலை என்று மாறுமோ|அமைச்சருக்கே நடந்த பரிதாபம்!

Follow us on Facebook and Instagram:

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top