டேய்! சும்மா இர்ரா…எஸ்.ஜே.சூர்யா |  செல்வராகவனின் “நெஞ்சம் மறப்பதில்லை” Sneak Peek.  

nenjam marappathillai sneak peek

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா கசாண்ட்ரா, நந்திதா போன்றோர் நடித்த படம் “நெஞ்சம் மறப்பதில்லை”. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான இப்படம் 2016 -ல் முடிக்கப்பட்டது. பின்பு, 2017 ஆம் ஆண்டு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. தற்போது, மார்ச் 5 ஆம் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது. 

SJ suriya nenjam marappathillai

செல்வராகவன் – யுவன் ஷங்கர் ராஜா கூட்டணிக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்தவகையில், இந்த படத்தின் மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், 2016 -ல் இதன் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக “என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா” என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 

nenjammarapathilai010321_1

தற்போது, இப்படத்தின் Sneak Peak வெளியாகியுள்ளது. அதில் எஸ்.ஜே.சூர்யா தனக்கென உள்ள Body Language -வுடன் நடித்துள்ளார். குறிப்பாக அதில் அவர் சொல்லும் “டேய்! சும்மா இர்ர்ரா” டயலாக் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. நகைச்சுவையோடு கூடிய வசனங்களை பேசி கவர்ந்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. அந்த Sneak Peek -ல் கட்டிலில் நண்பருடன் அமர்ந்திருக்கும் சூர்யா தன் முன்பாக படுத்திருக்கும் நபர் ஒருவரிடம் “டேய்! சும்மா இர்ர்ரா” என்ற டயலாக்கை பேசுகிறார். 

nenjammarapathilai010321_3

பேசிவிட்டு அவரை அடித்து கொன்று விடுகிறார் சூர்யா. “என் தோல்ல வளர்ந்த புள்ள” என்று சொல்லிவிட்டு கேசுவலாக நடித்திருக்கிறார் சூர்யா. பின்பு, “ஒருத்தன் எவ்வளவு நாள்தான் நல்லவனாவே இருக்கிறது” என்ற டயலாக்கை பேசிவிட்டு செல்கிறார். தற்போது இந்த Sneak Peek நெட்டிஸன்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த Sneak Peek “நெஞ்சம் மறப்பதில்லை”  படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. முன்னதாக “பேய் வந்து நிக்கிது” என்ற வசனம் பிரபலமானது குறிப்பிடத்தக்கது. 

Nenjam_Marappathillai

 

மேலும் படிக்க: 

 

இளம் நடிகையுடன் மீண்டும் கூட்டணி சேரும் விஜய் தேவரகொண்டா : பரவும் கிசு கிசு.

 

Follow us on :

 

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top