Main Menu

What’s New?

Connect With Us

தீபாவளி ரிலீசுக்கு மூன்று தமிழ் படங்கள் தயார்.

cinema
Read Carefully

SHARES

தீபாவளி ரிலீசுக்கு மூன்று தமிழ் படங்கள் தயார். கொரோனா ஊரடங்கின்போது திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. ஜூலை மாதம் முதல் மத்திய அரசு மாநில அரசுகளால் ஒவ்வொரு கட்டமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. பல தளர்வுகள் அறிவித்த அரசு திரையரங்குகள் திறப்பு பற்றிய முடிவை மட்டும் தாமதப்படுத்தினர்.  அவற்றின் படி மத்திய அரசு கடந்த மாதம் அறிவிக்கபட்ட தளர்வுகளில் திரையரங்குகள் சில கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதி அளித்துள்ளது. 
 
 
அவற்றின்படி சில விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு. அதேபோல், திரையரங்குகள் திறப்பது அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுத்துக்கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது. ஆனால், திரையரங்கு திறப்பது குறித்து இதுவரை தமிழக அரசு  எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அக்டோபர் 15 முதல் திரையரங்குகளை திறக்க அனுமதியளித்தது அரசு. ஆனால் தமிழகத்தில் இன்னும் இறுதிமுடிவு எடுக்கப்படவில்லை. 
இதனிடையில், அக்டோபர் 22-ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.ஆனால், இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.  கொரோனா ஊரடங்கில் திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் பல தயாரிப்பாளர்கள்,  உரிமையாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள் போன்றோர் மிகப்பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். இதற்கு தீர்வு காணும் வகையில் திரையரங்குகள் திறப்பு அனைவருக்கும் மகிழ்ச்சியளித்தது. 
 
மத்திய அரசு வழிகாட்டுதலின் படி, திரையரங்கினுள் 50 சதவீதம் மட்டுமே இருக்கை அளிக்கப்படவேண்டும். பார்வையாளர்கள் சமூக இடைவெளியுடன் அமரவேண்டும், திரையரங்கினுள் தின்பண்டங்கள் விற்பனை செய்யக்கூடாது போன்ற விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.  அதற்கு ஏற்றாற்போல் திரையரங்குகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தன. அதற்கு தகுந்த நடவடிக்கைகளை திரையரங்குகளுக்கு எடுத்து வருகின்றன. வருகிற 22- ஆம் தேதி திரையரங்குகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வரும் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். 
 
அப்படி, 22- ஆம் தேதி திரையரங்குகள் திறக்கப்பட்டால் என்னென்ன படங்கள் வெளிவரும் என்ற எதிர்பார்ப்பும்  கிளம்பியிருக்கிறது. அடுத்த மாதம் தீபாவளி வருகிறது என்பதால், அன்றைக்கு என்னென்ன திரைப்படங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, கிடைத்த தகவலின்படி மூன்று படங்கள் தீபாவளி சிறப்பு படங்களாக வெளிவர இருக்கின்றன. 
 
தீபாவளியன்று வெளியாகும் திரைப்படங்கள்:
 
எம்.ஜி.ஆர். மகன் : 

சசிகுமார், சத்யராஜ் ஆகியோர் நடிக்கும் எம்.ஜி.ஆர். மகன்.  “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”, ” ரஜினி முருகன்”, “சீமராஜ” போன்ற படங்களை இயக்கிய பொன்ராம் இந்த படத்தையும் இயக்கியுள்ளார்.  பாடகர்  அந்தோணி தாஸ் இசையமைத்துள்ளார்.  இந்த படத்தின் பாடல்கள்  அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. தீபாவளி சிறப்பாக இப்படம் வெளிவர இருக்கிறது.
 
 
களத்தில் சந்திப்போம் :

நடிகர் ஜீவா, அருள்நிதி நடிக்கும் படம் “களத்தில் சந்திப்போம்”.  இப்படத்தை இயக்குனர் ராஜசேகர் இயங்கியுள்ளார். இவர்  விமல் நடித்த “மாப்ள சிங்கம்” படத்தை இயக்கியவர். ஜீவா மற்றும் அருள்நிதி இருவரும் முதல்முறையாக ஒன்றாக நடிக்கின்றனர். இப்படமும் தீபாவளி சிறப்பாக வெளிவர இருக்கிறது. 
 
இரண்டாம் குத்து : 

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இப்படம் தீபாவளியன்று வெளிவர இருக்கிறது.                    “ஹாரா ஹாரா மஹாதேவகி”, “இருட்டு அறையில் முரட்டு குத்து” படங்களை இயக்கிய சந்தோஷ் P ஜெயக்குமார் இயக்கியுள்ளார்.     இப்படத்திற்கு சமீபமாக பல எதிர்ப்புகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அவற்றையெல்லாம் கடந்து இப்படம் ரிலீஸ் ஆவதற்கு தயாராகி வருகிறது.  
 
 
 
 
 
Top