Main Menu

What’s New?

Connect With Us

“வாத்தி கம்மிங்” பாடலுக்கு நடமாடும் பிரபல கிரிக்கெட் வீரர் : வைரலாகும் வீடியோ. 

Read Carefully
SHARES

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்தாண்டு பொங்கலன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் “மாஸ்டர்”. விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹேந்திரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் போன்ற பலர் நடித்திருந்தனர். 200 கோடி ரூபாய் கடந்து வசூல் சாதனையை படைத்து வருகிறது மாஸ்டர்.  கொரோனா பிடியில் சிக்கி சீர்குலைந்த திரையரங்குகளின் நிலைமையை நிலை நிறுத்திய படம் “மாஸ்டர்” என்று சொல்லலாம். 

திரையரங்குகளில் மீண்டும் மக்களின் கூட்டம் வரும் என்பதற்கு நம்பிக்கை அளித்த திரைப்படம் “மாஸ்டர்”. இதில், விஜய்சேதுபதியின் மற்றும்  ‘மாஸ்டர்’ மஹேந்திரன் நடிப்பு பெரிதும் பேசபட்டது. அனிருத் இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் செம ஹிட். அதில் குறிப்பாக, “வாதி கம்மிங்” பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. 

ரசிகர்களும், திரையுலக பிரபலங்கள் சிலரும் இப்பாடலுக்கு நடனமாடும் விடியோக்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகின. அந்தவகையில், தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் “வாத்தி கம்மிங்” பாடலுக்கு நடனமாடியுளள்ளார். அவருடன் இனைந்து ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் சேர்ந்து ஆடியுள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன. முன்னதாக, இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டியின் 2 வது இன்னிங்ஸில் ஒலிப்பரப்பட்ட “வாத்தி கம்மிங்” பாடலுக்கு அஸ்வின் நடனமாடினார். தற்போது, இந்த விடியோவை வெளியிட்டுள்ளனர். இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3 வது டெஸ்ட் போட்டி குஜராத் சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் வருகிற 24ஆம் தேதி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

Video : 

 

 

 

மேலும் படிக்க: 

 

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் DHRUV -ற்கு வில்லனா VIKRAM?

 

SHARES

Recent Posts

Advertisement Advertisement

Newsletter

Recieve daily updates from the near-future.

By signing up, you agree to our Privacy Policy

Top