திருவல்லிக்கேணியில் மாட்டின் அட்டூழியம்|கண்டுக்காத மாநகராட்சி!
சென்னை திருவல்லிக்கேணி பகுதி மற்றும் பார்த்தசாரதி கோவில் சுற்றியும் அதிகளவில் கால் நடைகள் சுற்றித் திருகின்றன.குறிப்பாக மாடுகள் அதிகளவில் தெருவில் திருகின்றன.இதனால்,வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றார்கள்.சிலசமயங்களில்,மாடுகள் மிரளுவதால் பொது மக்கள் அச்சத்துடன் சாலைகளை கடந்து செல்கின்றனர்.சென்னையில் மிக முக்கிய பகுதியாக திகழ்கிறது.இங்கு ஏறத்தாழ ஒரு லட்சம் நபர்கள் வாழ்ந்து வருகின்றன.
சென்னை மாநகராட்சியில் உள்ள ஒரு பகுதியாக இருக்கும் திருவல்லிக்கேணி.இங்கு உள்ள பார்த்தசாரதி கோயில் வைணவர்களின் 108 திவ்வியதேசங்களில் ஒன்று. திருவல்லிக்கேணி மட்டைப்பந்து ஆட்டத்திற்கு மிகவும் புகழ்பெற்றதாகும். எம் ஏ சிதம்பரம் மைதானம் திருவல்லிக்கேணியில் உள்ளது.150 வருடம் பழமைவாய்ந்த இந்து மேல்நிலை பள்ளி இங்கு தான் உள்ளது.அதுமட்டுமின்றி மகாகவி பாரதியாரின் வேண்டும் இங்கு உள்ளது.
தற்போது அது பாரதியாரின் நினைவிடமாக மாறியிருக்கிறது.இப்படி திருவல்லிக்கேணியின் பெருமைகளை சொல்லிக்கொண் டே போகலாம்.ஆனால்,திருவல்லிக்கேணி மார்க்கெட் பகுதியில் அதிகளவில் அழுகிய காய்கறிகளை கொட்டப்படுவதால் அதனை உன்ன மாடுகள் வருகின்றன.அதே சமயத்தில்,மாடுகளை அதன் உரிமையாளர்கள் ஏன் தெருக்களில் உலாவவிடுகின்றார்கள்?என்கின்ற கேள்வியும் எழுகின்றன. பார்த்தசாரதி கோவிலில் சமீபத்தில் நடந்த “சொர்கவாசல்” விழாவின் பொது மாடுகள் பக்தரின் வரிசையில் புகுந்தது.அங்கு பணியில் இருந்த சில காவலர்கள் வேடிக்கை பார்த்தார்கள்.பல முறை திருவல்லிக்கேணி மாநகராட்சிக்கு புகார்களை கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இப்பகுதி மக்கள் கூறினார்கள்.ஆகையால்,இனியும் தாமதிக்காது திருவல்லிக்கேணி மாநகராட்சிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தீர்வு:
1.) முதலில்,மாடுகள் தெருக்களில் திருந்தால் அதனை அப்புறப்படுத்தி மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
2.) திருவல்லிக்கேணி மார்க்கெட்டில் கொட்டப்படும் காய்கறிகளை சரியான பகுதிக்கு அப்புறப்படுத்த வேண்டும் அல்லது வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
3.) இது சம்மந்தமாக ஏதேனும் புகார் மனுக்கள் வந்தால்,உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் படிக்க:1.) சாலைகள் குண்டும்,குழிகளும்|சென்னை மாநகராட்சி கவனத்திற்கு!
2.) இதுவும் ஆபத்தே நடவடிக்கை வேண்டும்|அதிகாரிகளின் கவனத்திற்கு!