கொரோனா எதிரொலி : Don, Chiyaan60 படப்பிடிப்புகள் முடக்கம்.

don movie shooting stopped

கொரோனா நோயின் இரண்டாம் அலை நாட்டில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பல துறைகள் பொருளாதார ரீதியில் பின்தங்கிவிட்டன. அதில் ஒன்று திரைத்துறை. சென்ற வருடம் கொரோனா ஊரடங்கின் போது திரையரங்குகள் பொருளாதார ரீதியில் மிகவும் மோசமடைந்தன. படப்பிடிப்புகளும் தடைபட்டு போயின. பிறகு, படப்பிடிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக தொடங்கப்பட்டு வந்தன. தற்போது கொரோனாவின் 2-ஆம் அலை வேகமாக பரவி வருவதால் திரையரங்குகளை மீண்டும் மூட உத்தரவிட்டுள்ளது அரசு. இதனால், படப்பிடிப்புகள் மீண்டும் தடைப்படும் அபாயம்  உள்ளது. சில படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டு விட்டன.

ஏற்கனவே, எடுத்து முடிக்கப்பட்ட படங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. சிவகார்த்திகேயனின் “டாக்டர்”, சசிகுமாரின் “எம்.ஜி.ஆர்.மகன்”, விஜய்சேதுபதியின் “லாபம்”, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான “தலைவி” போன்ற படங்கள் வெளியீட்டுக்கு தயார் நிலையில் உள்ளன. ஆனால், திரையரங்குகளின் மூடலால் இந்த படங்களின் வெளியீடு தாமதமாகிறது. இவற்றில் சில OTT தளத்தில் வெளியிடவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

DON, CHIYAAN60, MGR MAGAN, LAABAM,

மேலும், எடுக்கப்பட்டு வரும் சிவகார்த்திகேயனின் Don , சீயான் விக்ரம், சூர்யா படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுவிட்டன. ரஜினிகாந்த் நடிக்கும் “அண்ணாத்த” படபபிடிப்பு மட்டும் ஐதராபாத்தில் உரிய பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. ஆனால், சினிமா துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியாகி இருக்கிறது. அவர்களுக்கு  நிதி அளித்து படப்பிடிப்புக்கு  தடை விதிக்கலாம். சென்ற வருடம் பெரிய நடிகர்கள் மூலமும் அரசு மூலமும் பெறப்பட்ட நிதியில் FEFSI ஊழியர்களுக்கு அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. அவை எல்லாம் சிறிது காலம் மட்டுமே. தொழில் மட்டுமே நிரந்தரம். அந்த தொழில் இன்றி தவிக்கும் இதுபோன்ற தொழிலாளர்கள் நிலை என்னவாகும்?

தற்போது, இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் முழு ஊரடங்கு போடப்படும் என்று கூறப்படுகிறது. அதனால், கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு நின்றுபோகும் அபாயமுள்ளது.

மேலும் படிக்க:

“ஜகமே தந்திரம்” ஜூன் மாதம் OTT -யில் ரிலீஸ் : தனுஷ் ரசிகர்கள் ஏமாற்றம் | NETFLIX.

 

 

 

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top