பதவி தேடி வர…இந்த கோயிலுக்கு போங்க…|தேர்தல் நேரம்!

poonamallee-varadaraja-perumal-temple-cover-pics.jpg

பதவி தேடி வர…இந்த கோயிலுக்கு போங்க…|தேர்தல் நேரம்!

arulmigu-thirukkatchinambigal-and-varadaraja-perumal-devasthanam-poonamallee-chennai-temples
சென்னை பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோயில்

தந்தையுடன் அடிக்கடி பிரச்சினை ஏற்படுகிறதா? சமூக அந்தஸ்துடன் வாழ வேண்டுமா? தலைமை பதவி பெற ஆசையா? எதுவானாலும் நீங்கள் செல்ல வேண்டிய தலம் சென்னை பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோயில்.

1000 ஆண்டுகளுக்கு முன் சென்னை பூந்தமல்லியில் வாழ்ந்தவர் வீரராகவர்- கமலாயர் தம்பதி. இவர்களின் மகனாக பிறந்தவர் திருக்கச்சி நம்பி. இவர் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு நடந்தே சென்று வழிபடுவதை, வழக்கமாக கொண்டிருந்தார். பக்தரின் சிரமத்தை கண்ட வரதராஜ பெருமாள், பூந்தமல்லியிலேயே நேரில் வந்து காட்சி அளித்தார்.

திருக்கச்சி-நம்பி
திருக்கச்சி-நம்பி

அதனடிப்படையில், இங்கு கோயில் எழுப்பப்பட்டது. பெருமாளுக்கு ஆலவட்டம் என்னும் விசிறி சேவை செய்ய விரும்பிய திருக்கச்சி நம்பி, திவ்ய தேசங்களான ஸ்ரீரங்கம், திருப்பதி சென்று தங்கினார். ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆறு பாய்வதாலும், திருப்பதியில் மலை காற்று வீசுவதாலும் குளிர்ச்சி நிலவுகிறது. பிரம்மா நடத்திய யாக குண்டத்தில் இருந்து தோன்றியதால், காஞ்சிபுரம் உஷ்ணமாக இருப்பதாக பெருமாள் தெரிவித்தார்.

இதன்பின் பூந்தமல்லிக்கு வந்த நம்பி, வரதராஜருக்கு சேவை செய்வதற்காக விசிறியை கையில் தாங்கினார். பூந்தமல்லி கோயிலில் திருப்பதி வெங்கடேசர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், காஞ்சி வரதராஜர் சன்னதிகள் உள்ளன. தனித்தனியாக பிரம்மோற்ஸவம் நடக்கிறது.

varadaraja-perumal-garuda-seva
சென்னை பூந்தமல்லி வரதராஜ பெருமாள் உற்சவர் மூர்த்தி

மாசி மாதத்தில், திருக்கச்சி நம்பியின் அவதார விழாவின் (பிப்ரவரி 21) போது காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் இருந்து மாலை, பரிவட்டம், பட்டு வஸ்திரம் இக்கோயிலுக்கு வரும். நம்பியின் சன்னதி முன் வரதராஜரை எழுந்தருளச் செய்து தேவராஜ அஷ்டகம் பாடுவர்.

அப்போது நம்பிக்கு விசேஷ திருமஞ்சனம் அபிஷேகம் நடக்கும். ராமானுஜரின் குருநாதராக இருந்தவர் திருக்கச்சி நம்பி. ராமானுஜரின் திருநட்சத்திரத்தன்று அவரது அவதார தலமான ஸ்ரீபெரும்புதூருக்கு மாலை, பரிவட்டம், பட்டு வஸ்திரம் பூந்தமல்லியில் இருந்து எடுத்துச்செல்லப்படும்.

திருக்கச்சி நம்பி
திருக்கச்சி நம்பி

இங்குள்ள மஹாலக்ஷ்மி தாயார், மல்லிகைப் பூவில் அவதரித்ததால் இத்தலம் பூவிருந்தவல்லி எனப்பட்டது. பிற்காலத்தில் பூந்தமல்லி என மாறியது. மூலவர் வரதராஜப் பெருமாளின் தலைக்கு பின்புறத்தில் சூரியன் காட்சி தருகிறார்.

சூரியத்தலமான இங்கு சூரிய திசை நடப்பவர்கள், தந்தையுடன் கருத்து வேறுபாடு உள்ளவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், அந்தஸ்து பதவி பெற விரும்புபவர்கள், பெருமாளுக்கு செவ்வரளி மாலை சாத்தி வழிபடுகின்றனர்.

சென்னை-பூந்தமல்லி-வரதராஜ-பெருமாள்-உற்சவர்-மூர்த்தி
சென்னை-பூந்தமல்லி-வரதராஜ-பெருமாள்-உற்சவர்-மூர்த்தி

இங்கு எப்படி செல்வது?

சென்னையிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில், 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. திருக்கச்சி நம்பி திருநட்சத்திரம், வைகுண்ட ஏகாதேசி ஆகிய நாட்கள் இங்கு விசேஷ நாட்களாக பார்க்கப்படுகிறது. காலை 6.30 மணி முதல் 11. 30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல்  இரவு 8.30 மணி வரையிலும் கோவில் செயல்படும் தொடர்புக்கு 044-26272066

 

மேலும் படிக்க: 

நோய்களை தீர்க்கும் “நூபுர கங்கை”|சுவாரஸ்ய தகவல்!

திருவிசநல்லூரில் கிணற்றில் கங்கை|சிறிதும் நீர் மட்டம் குறையாது!

 

Follow us on Facebook and Instagram:

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top