விக்ரம் நடிப்பில் உருவாகும் கோப்ரா படத்தின் டீஸர் இன்று காலை 10:30 மணியளவில் வெளியிடப்பட்டது. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களின் மூலம் பல பாராட்டுகளை பெற்ற அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்குகிறார். மேலும், இப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கடந்த வருடம் பிப்ரவரி மாதம் இப்படத்தின் First Look வெளியிடப்பட்டது. அதில் விக்ரம் 7 கெட்டப்களில் இருந்தார். இந்நிலையில், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தின் “தும்பி துள்ளல்” பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இன்று காலை படக்குழு மூலம் படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 Screen Studios -ன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. சரியாக 10:31 மணியளவில் வெளியான டீசரில் விக்ரம் பல கெட்டப்களில் தோன்றுகிறார். முன்னதாக First Look -ல் இருந்த சில கெட்டப்களில் தோன்றினார்.
கோப்ரா டீஸர் மூலம் விக்ரம் ஒரு Maths வாத்தியார் என்பது தெரியவருகிறது. இர்ஃபான் பத்தானுக்கும், விக்கிரமுக்கும் சண்டை காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், படத்தின் கதை Mathematical சார்ந்ததாக இருக்கும் எனத் தெரிகிறது. வழக்கம் போல, விக்ரம் தனது தனிப்பட்ட நடிப்பையும் கதைக்கு ஏற்றது போல தன்னை மாற்றி கொள்ளும் வித்தையையும் வெளிக்கொண்டிருப்பார் என்று தெரிகிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை மிரட்டுகிறது. இர்ஃபான் பத்தானின் முதல் படம் என்பதால் அவர்மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் வெளியீடு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை ஆனால், இந்தாண்டு கோடைகாலத்தில் வெளியாகலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.
படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மேலும், விக்ரம் அடுத்ததாக “பொன்னியின் செல்வன்” படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Cobra Teaser: https://www.youtube.com/watch?v=8ScCLfGGOPY
Follow us on Facebook and Instagram: