கோப்ரா படத்தின் டீஸர் அப்டேட் : ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் ஸ்பெஷல்.

cobra teaser
கோப்ரா படத்தின் டீஸர் அப்டேட் : ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் ஸ்பெஷல் :

நடிகர் விக்ரம் நடிக்கும் “கோப்ரா” படத்தின் டீஸர் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார்.

cobra

மேலும், இப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு இதுவே நடிகராக அறிமுகமாகும் முதல் படம் ஆகும். கடந்த வருடம் பிப்ரவரி மாதம் இப்படத்தின் First Look வெளியிடப்பட்டது. அதில் விக்ரம் 7 கெட்டப்களில் இருந்தார். இந்நிலையில், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வந்தார். 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தின் “தும்பி துள்ளல்” பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இன்று (06/01/2021) இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் ஸ்பெஷலாக படத்தின் டீஸர் பற்றிய அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் Seven Screen Studios  வெளியிட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் பிறந்தநாளுக்கான வாழ்த்தை தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளது. 

cobra teaser

இந்நிலையில், ஜனவரி 9 ஆம் தேதி படத்தின் டீஸர் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். கொரோனாவுக்கு முன் பெரும்பாலான காட்சிகள் முடிவடைந்தாலும் தற்போது படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் அஜய் ஞானமுத்துவுக்கு முந்தைய இரண்டு படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், விக்ரம் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானுடனான இந்த கூட்டணிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், பொங்கல் தினத்தன்று  ஈஸ்வரன் மற்றும் மாஸ்டர் படங்கள் திரைக்கு வரவுள்ளது. மேலும், விக்ரம் அடுத்ததாக “பொன்னியின் செல்வன்” படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது  குறிப்பிடத்தக்கது.  

 

Also Read: பிரஷாந்தின் “அந்தகன்” :  ஜனவரி 25 -ல் படப்பிடிப்பு தொடக்கம். 

Follow us on Facebook and Instagram:

 

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top