தமிழகத்தில் இன்று முதல் அமலாகும் இரவுநேர ஊரடங்கு : கட்டுப்பாடுகள் என்னென்ன?

CM announces night lockdown in Tamlinadu

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் மேலான நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனாவின் இரண்டாம் அலை பாதிப்பு நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே செல்கிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேலான கேஸ்கள் உறுதிசெய்யப்படுகிறது. இதனால், அங்கு இன்றுமுதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லி கொல்கத்தா போன்ற பெருநகரங்களிலும் சில கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது அம்மாநில அரசு.

Night curfew in chennai

அந்தவகையில் தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. முதல் அலையை கட்டுக்குள் கொண்டுவந்தது தமிழக அரசு. மீண்டும் 2 -ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. ஊரடங்கு அறிவித்ததால் வடமாநில தொழிலாளர்கள் அவரவர்கள் ஊருக்கு செல்ல சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் முன்பு காத்துக்கிடக்கின்றனர்.

இன்று முதல் (20/04/2021) இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு என கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்தவகையில், எவைகளுக்கு, என்னென்ன கட்டுப்பாடுகள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.  அதன் விவரம் இதோ…

* பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் முழுவதுமாக ஆன்லைனில் மட்டுமே  நடைபெறும்.

* 12 -ஆம் வகுப்பு பொது தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் நாள் 15 நாட்களுக்கு முன்னதாக அறிவிக்கப்படும்.

*  தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதி.

* திரையரங்குகள் 50% ரசிகர்களுடன் மட்டுமே செயல்பட அனுமதி.

theatre with 50percentage occupancy

* திரையரங்கில் சமூக இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்டவை கடுமையாக கடைபிடிக்க உத்தரவு.

*  விதிமுறைகளை பின்பற்றாத திரையரங்குகள், நிறுவனங்கள் உள்ளிட்டவை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

* ஏற்கனவே அனுமதி பெற்ற கோவில் குடமுழுக்கு மட்டும் 50 நபர்களுடன் நடைபெற அனுமதி.

* திருமணத்திற்கு 100 பேரும் இறப்பு, துக்க காரியங்களுக்கு 50 நபர்கள் மட்டுமே அனுமதி.

இரவு நேர ஊரடங்கின்போது விதிக்கப்பட்டுள்ள தடைகள் :

 

* இரவு நேர ஊரடங்கானது இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும்.

* இரவு நேர ஊரடங்கின்போது தனியார் மற்றும் பொது போக்குவரத்துக்கு கிடையாது.

*  தமிழ்நாட்டில் இரவுநேர ஊரடங்கு செவ்வாய் கிழமை (20/04/2021) முதல் அமலில் இருக்கும்.

* மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை.

* இன்று முதல் (20/04/2021) அடுத்த அறிவிப்பு வரும் வரையில் இரவு 9 மணி வரையில் மட்டுமே மதுக்கடைகள், பார்கள் செயல்பட அனுமதி.

* இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்தாலும் ஊடகம் மற்றும் பத்திரிக்கைத் துறையினர் தொடர்ந்து செயல்பட அனுமதி.

* இரவு நேர ஊரடங்கின்போது அத்தியாவசிய பொருட்கள் மற்றும் விநியோகம் தொடர்ந்து மேற்கொள்ள அனுமதி.

* இவை அனைத்தும் உரிய சமூக இடைவெளியுடன் நடைபெற வேண்டும் எனவும் அறிவுறுத்தல்.

ஞாயிறு முழு ஊரடங்கின்போது விதிக்கப்பட்டுள்ள தடைகள் :

தமிழகத்தில் இன்று முதல் அமலாகும் இரவுநேர ஊரடங்கு : கட்டுப்பாடுகள் என்னென்ன?

 

* ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

*   ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது கடற்கரை, சுற்றுலாத்தலங்கள் மூடப்படும்.

* ஞாயிறு முழு ஊரடங்கின்போது மட்டும் உணவகங்களில் குறிப்பிட்ட நேரங்களில் பார்சலுக்கு மட்டும் அனுமதி.

parcels only allowed in hotels

* ஞாயிறு அன்று காலை 6 – 10 மணி வரையிலும், மதியம் 12 – 3 மணி வரையில் மட்டுமே பார்சலுக்கு அனுமதி.

* ஞாயிறு முழு ஊரடங்கின்போது அத்தியாவசிய சேவைகள் தவிர காய்கறி, மளிகை கடை, ஷாப்பிங் மால்கள் உள்ளிட்டவை இயங்க தடை.

Night curfew in chennai

* பால் விநியோகம், மருந்து கடை உள்ளிட்டவை தொடர்ந்து இயங்க அனுமதி.

* ஞாயிறு அன்று இறைச்சி மற்றும் மீன் மார்க்கெட் உள்ளிட்டவை இயங்க தடை.

* இவை அனைத்தும் உரிய சமூக இடைவெளியுடன் நடைபெற வேண்டும் எனவும் அறிவுறுத்தல்.

 

மேலும் படிக்க:

 

 

Follow us on :

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top