குழந்தைகள் தம் உடம்பைத் தொடுதல் பெற்றோர்களின்…|தினம் ஒரு குறள்:
தினம் ஒரு குறள்:
திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள்,மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தது.அதன் வரலாறுகளையும்,1330 திருக்குறள்களையும் தினமும் காண்போம்…
திருக்குறளில், தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை. திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை. திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்.
*அறத்துப்பால்:
➜இல்லறவியல்:
7.) மக்கட்பேறு:
65.) மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவா்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு
பொருள்:
குழந்தைகள் தம் உடம்பைத் தொடுதல் பெற்றோர்களின் உடம்பிற்கு இன்பம் தரும். அவர்களின் மழலைச் சொற்களைக் கேட்டல் காதுக்கு இன்பம் தரும்.
மேலும் படிக்க:
Follow us on :