Main Menu

What’s New?

Connect With Us

சென்னை MTC பேருந்தில் கொரோனா அபாயம்| நடவடிக்கைகளை எடுக்குமா அரசு?

Read Carefully

SHARES

சென்னைக்கு மிக முக்கியமாக கருதப்படுவது இரு விஷயங்கள் ஒன்று குடிக்க தண்ணீர் மற்றொன்று மாநகர பேருந்து.தண்ணீரை பற்றி இன்னொரு கட்டுரையில் காண்போம்.தற்போது கொரோனா காரணமாக கடந்த 5 மாதங்களாக MTC அதாவது மாநகர பேருந்துகள் ஓடாமல் இருந்தன.இந்நிலையில் கடந்த மாதம் முதல் மாநகர பேருந்துகள் ஓடலாம் என அரசு அறிவித்திருந்தது.மேலும் சில விதிமுறைகளையும் அறிவித்திருந்தது.அதில் அனைவரும் மாஸ்க் அணியவேண்டும்,பேருந்தில் ஏறியவுடன் சானிடைசர் பயன்படுத்த வேண்டும்,மிக முக்கியமாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் போன்றவை இருந்தன.இதனை மக்கள் ஒழுங்காக கடைப்பிடிப்பதில்லை.சிலர் வாய்க்கு மாஸ்க் அணிந்தும்,மாஸ்க் அணியாமலும்,சானிடைசரை ஒழுங்காக பயன்படுத்தாததும்,சமூக விலகலை கடைப்பிடிக்காது இருப்பது போன்றவற்றை மக்கள் செய்து வருகின்றன.அரசு ,அதிகாரிகள்,சமூக ஆர்வலர்கள்,என பலரும் கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியும்,மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லையா? அல்லது அதனை கேட்காமல் இருக்கிறார்களா?என தெரியவில்லை.

இது ஒருபுறமிருக்க இதனை தட்டி கேட்கும் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளோ கண்களை மூடிக்கொண்டு செல்கின்றன.தற்போது சென்னை மாநகர பேருந்துகளில் அரசு கூறிய விதி முறைகளை ஒன்றைக்கூட பின்பற்றுவதில்லை.இதனை அதிகாரிகள் கவனிக்கின்றார்களா? கவனித்தால் இது போல் நடக்குமா?ரோட்டில் யாரேனும் மாஸ்க் அணியவில்லை என்றால் மாநகராட்சி அபராதங்களை விதிக்கிறது.அது போல் வண்டிகளில் யாரேனும் மாஸ்க் அணியாமல் சென்றால்,அவர்களை பிடித்து போக்குவரத்து போலீசார் அபராதங்களை விதிக்கிறார்கள்.பொது இடங்களில் யாரவது சமூக விலகலை பின்பற்ற வில்லை என்றால் அதன் சார்ந்த அதிகாரிகள் அபராதங்களை விதிக்கின்றன.அப்போது மாநகர பேருந்துகளில் அரசு கூறும் விதிமுறைகளை பின்பற்ற வில்லையெனில்? அதன் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கைகளை மேக்கொள்ள வேண்டாமா? இதற்கு என்ன காரணங்களாக இருக்கும் என்று யோசிக்கும் போது,மக்களின் கவனக்குறைவை தாண்டி அரசு கூறிய விதிமுறைகளை அதிகாரிகளே பின்பற்றுவதில்லை.

ஆம்! ஒரு பேருந்தில் குறிப்பிட்ட நபர்களை மட்டுமே நடத்துனர் அனுமதிக்க வேண்டும்.ஆனால் அளவிற்கு அதிகமாக பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்கிறார்கள்.இதற்கு நாம் நடத்துனரை குறைகூறி பயனில்லை.பாவம் அவரென்ன செய்வார்,உயர் அதிகாரியின் கட்டளைகளையே நடத்துனர் பின்பற்றுகிறார்.சில நேர்மையான அதிகாரிகள் நினைத்தால் கூட முடியாது.காரணம் அரசின் பேருந்து.அரசு பேருந்துகளில் அபராதங்களை விதிக்கமுடியுமா?முடியும்……“போக்குவரத்து கழகத்திற்கு அபராதங்களை” வசூலிக்க முடியும்.ஆனால் இங்கு அரசு தலையிட்டு அதிகரிக்கும்.போக்குவரத்து கழகங்கள் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.அபராத தொகையினை வசூலித்தால் அரசுக்கு அவமானமாகிவிடும்.ஆகையால் அதிகாரிகளுக்கு அரசு அழுத்தம் கொடுக்கும்.இதனாலையே அதிகாரிகள் கண்டுக்கொள்வதில்லை.

tnstc

போருந்துகளில் மக்கள் குறைந்த அளவில் தான் பயணிக்க வேண்டும் என்று அரசு கூறினாலும்,நடைமுறையில் இது சாத்தியமில்லை.குறைந்த அளவில் பேருந்தில் மக்கள் பயணித்தால் அரசுக்கு நஷ்டம் ஏற்ப் படக்கூடும்.இது அரசுக்கும் நன்கு தெரியும்.ஆகையால் அரசு ஏதோ கடமைகென்று விதிமுறைகளை கூறி மாநகர பேருந்துகளை செயல்பட உத்தரவிட்டுள்ளது.அதிகாரிகளும் கடமைகென்று விதிமீறல்களை கண்டும் காணாதவாறு இருக்கின்றன.மக்களும் அஜாக்கிரதைவுடன் இருக்கின்றன.ஆகா அரசு,அதிகாரிகள்,மக்கள் என அனைவரும் பொறுப்பில்லாது இருந்தால் கொரோனவை நாம் எப்படி வெல்வது?

ஒரு பள்ளியில் மாணவன் சரியில்லாது இருந்தால்,ஆசிரியர் கண்டிக்கவேண்டும்.ஆசிரியர் சரியில்லாது இருந்தால்,தலைமை ஆசிரியர் கண்டிக்கவேண்டும்.அவரும் சரிஇல்லையென்றால் சம்மந்தப்பட்ட மேல் அதிகாரி கவனிக்க வேண்டும்.இவர்கள் யாவரும் சரியில்லாது இருந்தால்,ஒட்டுமொத்த கல்வி கூடங்களும் பாதிப்படையும் அல்லவா?அது போலத்தான்,அரசு,அதிகாரிகள்,மக்கள் என அனைவரும் பொறுப்பில்லாது இருந்தால் நாடு என்னவாகும்?ஆகையால் அரசு, அதிகாரிகளை கண்டித்து நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.அதிகாரிகள்,மக்களை கண்காணித்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இல்லையெனில் சென்னை மாநகர பேருந்து மூலமாக பலருக்கும் கொரோனா பரவக்கூடும்.

Top