Main Menu

What’s New?

Connect With Us

சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு|புதிய கட்டண விவரம்!

Read Carefully
SHARES

சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு|புதிய கட்டண விவரம்!

metro-rail..

மெட்ரோ ரயில் தொடங்கிய காலம் முதலேயே, அதற்கான டிக்கெட் விலை அதிகமாக உள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டினார்கள். சிலர் புகார்களையும் கொடுத்தனர். இத்தகைய புகார்கள் தொடர்ந்து வரவே, தமிழக அரசு மெட்ரோ ரயிலுக்கான கட்டணத்தை குறைக்க உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, மெட்ரோ ரயில் நிறுவனம் கட்டணத்தை குறைத்து, அதன் விவரத்தை வெளியிட்டது.

metro-rail-in-chennai

இதில் டோக்கன் டிக்கெட்டுகளுக்கு அதிகபட்சமாக ரூ.70-ல் இருந்து ரூ.50 ஆக கட்டண குறைப்பு இன்று(22.02.2021) முதல் அமலுக்கு வருகிறது. கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு காலகட்டத்தின் முன்பு வரை சுமார் 1 லட்சத்து 13 ஆயிரம் வரை தினசரி பயணித்து வந்தனர். ஊரடங்கால் மெட்ரோ ரயில் சேவை முற்றிலும் முடங்கின. அதன் பின்னர், நோய் பரவல் கட்டுக்குள் வந்துவிட்டதால், கடந்தாண்டு செப்டம்பர் 7-ந் தேதி முதல் மீண்டும் இயக்கப்பட்டன.

chennai-metro-rail-sevai

ஆனால், தற்போது 80ஆயிரம் பயணிகள் மட்டுமே பயணித்து வருகின்றன. மெட்ரோ ரயிலின், அதிகப்படியான கட்டணமே இதற்கு காரணம் என தகவல் வெளியாகின. இதனை பரிசீலித்த முதல்வர், மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க உத்தரவிட்டார். அதன் படி புதிய கட்டணத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதில், டோக்கன் முறையில் வாங்கப்படும் டிக்கெட்டுகளுக்கு அதிகபட்சமாக இருந்த ரூ.70 கட்டணம் ரூ.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

metro-train

பயண அட்டை மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடியும், கியூஆர் குறியீடு மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு 20 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது, என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். இது இன்று(22.02.2021) முதல் நடைமுறைக்கு வருகிறது.

chennai-metro-privatisation

 

புதிய கட்டண விவரம்:

 

ரயில் நிலையங்கள்:                                                                    பழையது              புதியது       

● விமான நிலையம் – விம்கோநகர்                                                 70                              50

● சென்ட்ரல் – கோயம்பேடு பஸ் நிலையம்                                 40                              30

● ஆலந்தூர் – அண்ணாநகர் கிழக்கு                                                  50                              40

● விமான நிலையம் – தண்டையார்பேட்டை                              70                              50

● கிண்டி – அஷோக் நகர்                                                                         30                              20

● சைதாப்பேட்டை – ஐகோர்ட்டு                                                         40                              30

● எழும்பூர் – கோயம்பேடு பஸ் நிலையம்                                     40                              30

● ஷெனாய் நகர் – விமான நிலையம்                                              60                              40

● விமான நிலையம்- எழும்பூர்                                                           60                             40

● புதிய வண்ணாரப்பேட்டை – எல்.ஐ.சி.                                         40                              30

● வடபழனி – கோயம்பேடு பஸ் நிலையம்                                   30                              20

 

மேலும் படிக்க: 

வேகமெடுக்கும் டெலிவரி பாய்ஸ்|மக்களே உஷார்!

8 தொகுதி பெண்களுக்கே பாஜ அறிவிப்பு|எந்த தொகுதி?

 

Follow us on Facebook and Instagram:

SHARES

Recent Posts

Sudha Madhavan – Artist | Traveller | Poet | Social worker

previous arrowprevious arrow
next arrownext arrow
Shadow
Slider

Newsletter

Recieve daily updates from the near-future.

By signing up, you agree to our Privacy Policy

Top