Main Menu

What’s New?

Connect With Us

புற்றுநோயில் சென்னை 2-வது இடம்/அதிர்ச்சி ரிப்போர்ட்!

Read Carefully

SHARES

சமீப காலமாக யாரை பார்த்தாலும் அவருக்கு கேன்சர்,இவருக்கு கேன்சர்,என்கின்ற செய்தியை காதில் கேக்கமுடிகிறது.இதற்கெல்லாம் மேலாக இந்திய அளவில் கேன்சறால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மாநிலமாக சென்னை உள்ளதாக அதிர்ச்சியான ரிப்போர்ட் வந்துள்ளது.கேன்சர் வருவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது,உடலில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடுகளாகும்.என்றாலும் இது மிக குறைந்த சதவீதமே! கேன்சர் வர இதை விட பல முக்கியமான காரணங்கள் உள்ளன.

 

1.)புகைபிடிப்பது,புகையிலை,ஹான்ஸ்,பான்பராக்,போன்ற வற்றால் கேன்சர் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்திக்கிறது.சமீபத்தில் இதற்கு தடை வந்தது.ஆனால் இன்றும் தாராளமாக பெட்டிக் கடைகளில் விற்கப்படுகின்றன.இதனை அரசும்,அதிகாரிகளும்,கண்டுக்கொள்வதில்லை.மேலும் பொது இடங்களில் புகைப் பிடித்தால் அபராதம் என்கின்ற விதிமுறைகள் உள்ளன.இத்தனையும் காற்றில் விடப்பட்டுவிட்டன.

அதே போல் புகையிலை,ஹான்ஸ்,பாக்கெட்டின் மீது இது கேன்சர் வரக்கூடும் என்கின்ற எச்சரிக்கையும் இடம் பெற்றிருக்கும்.தீங்கு என்று தெரிந்தும் இத்தகைய பொருட்களை தயாரிக்கப்படலாமா?இதனை அரசு அனுமதிக்கலாமா?அரசு ஏன் உற்பத்திக்கு தடை செய்யவில்லை?போன்ற கேள்விகள் நம் மனதிற்குள் எழுகிறது.உற்பத்திக்கு தடையில்லாமல்,இதனை விற்கப்படும் கடைகளுக்கு தடையில்லாமல்,விழிப்புணர்வு செய்வதன் மூலம் என்ன பயன்?

ஆம்!“புகைபிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும்”என்கின்ற வசனங்களோடு பல நூறு கோடிகளை செலவு செய்து விழுப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது அரசு.“பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டுலையும் ஆட்டுவது போல்.இதனை அருந்தினால் நம் உடலுக்கு தீங்கு என மக்களும் நினைப்பதில்லை,அரசும் நிலைப்பதில்லை,இதை பார்க்கும் போது நகைப்பு தான் வருகிறது.

குடி பழக்கத்தினால் ஏற்பட்ட புற்றுநோய்

2.)மது குடிப்பதாலும் புற்றுநோய் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.மது குடிப்பதன் மூலமாக நல்ல செல்கள் அனைத்தும் நாளடைவில் அழிந்து,புற்றுநோய் செல்கள் உருவாகின்றன.மது நாட்டிற்கு பேராபத்தாகும்.மதுவினால் வீட்டில் பிரச்னை சண்டைகள்,நிதானம் இல்லாது கொலை செய்வது,தற்கொலை,கொள்ளை,விபத்துகள்,இது போக புற்றுநோய் அபாயம்.தேவைதானா நாட்டிற்கு?படிப்படியாக மது விளக்கினை அமல்படுத்துவோம்,என்கிறது அரசு.எப்போது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

3.)நாம் அன்றாட உண்ணும் உணவில் அதிகளவில் கலப்படங்கள் இருக்கின்றன.இதன் மூலமாகவும் நமக்கு புற்று நோய் உண்டாகிறது.சமீபத்தில்“வெல்லத்தில் கலப்படம் நடைபெறுவதாக பத்திரிகையில் செய்திகள் வெளியாகி பெரும் சர்ச்சையானது.அதே போல் பால்,டீ தூள்,அரிசி,சக்கரை,கோதுமை,காய் பழ வகைகள்,எண்ணெய்,நெய்,மிளகாய்தூள்,பருப்பு வகைகள்,உப்பு,போன்ற அணைத்து பொருட்களையும் கலப்படம் உள்ளதாக கூறப்படுகிறது.இதனை கட்டுப்படுத்த உணவு பாதுகாப்பு துறை உள்ளது.ஆனால் நடவடிக்கைகள் குறைவே அல்லது புகாரின் பெயரிலே நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகிறது.கலப்பட உணவை உட்கொண்டால் புற்று நோய் மட்டுமல்லாது பல நோய்களும் வரக்கூடும்.

4.)தொழில்ச் சாலைகளின் மூலமாக வெளியேறும் அசுத்த காற்றும்,கழிவு நீரும்,புற்றுநோய் வரக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றன.அரியனூர் அருகே உள்ள ஒரு சிமெண்ட் தொழிச்சாலை மூலமாக வெளியேறும் அசுத்த காற்றினால் அப்பகுதி மக்களுக்கு உடல் முழுவதிலும் அரிப்பும்,தோளில் மாற்றமும் ஏற்படுகிறதாம்.அதே போல் கழிவு நீர் பெரும்பாலும் ஆற்று நீரில் கலக்கின்றன.இதன் மூலமாகவும் மக்களுக்கு கேன்சர் வரக்கூடும்.

5.)கதிர் வீச்சு காரணமாக புற்று நோய் பாதிப்பு ஏற்படுகிறது.செல்போன் அதன் சார்ந்த சாதனங்கள்,டவர்கள்,போன்றவற்றால் அதில் இருந்து வெளியாகும் கதிர் வீச்சால் புற்றுநோய் ஏற்படுகிறது.இது மட்டுமல்லாது,நம் வீட்டில் உள்ள பிரிஜ்,போன்ற மிஷின்களினாலும் புற்றுநோய் அபாயம் உள்ளது.

இதன் காரணமாகவே புற்றுநோய் அபாயங்கள் அதிகளவில் உள்ளன.இதனை குறைக்க அரசின் பங்கு தேவைப்படுகிறது அல்லது தானாக முன்வந்து சரிசெய்யனும்.ஆகையால் புற்றுநோய் என்பது ஊட்டச்சத்து குறைபாட்டினால் மட்டுமே வருகிறது என்று நாம் கூறிவிட முடியாது. மேலே கூறிய காரணத்துனாலையும்,புற்றுநோய் வரக்கூடும்.ஆகையால் அரசு இதனை கருத்தில் கொண்டு நடவடிக்கைகளை எடுத்தால் சென்னை உள்பட தமிழகம் புற்றுநோயில் இருந்து விடுபடும்.

Top