Main Menu

What’s New?

Connect With Us

ச்சீ…இப்படியெல்லாம் படம் எடுக்கலாமா?|”மிஸ்டர் விர்ஜின்”!

Read Carefully

SHARES

தமிழ் சினிமாவின் வரலாற்றில்,“அந்த மாதிரியான” படங்கள் எல்லாம் ஓடாது? என்கின்ற காலம் மாறி. தற்போது, “அந்த மாதிரியான”படங்களுக்கு “அடல்ட் காமெடி” என்று பெயர் சூட்டி,படத்தை எடுத்து,வெளியிட்டு,வெற்றி கரமாக ஓட்டி,பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனிலும் அள்ளி வருகிறது.அந்த வகையில்,இயக்குனர்.சந்தோஷ் பி ஜெயக்குமார்,தமிழில் முதல் முதலில் இயக்கியப்படம்.“ஹர ஹர மஹாதேவக்கி”.இப்படம் அடல்ட் காமெடி என்கின்ற பெயரில் மிகுந்த ஆபாசமாக எடுக்கப்பட்டது.பலரும் இப்படத்தை எதிர்த்தனர்.இருப்பிலும்,தணிக்கை குழு இப்படத்திற்கு “ஏ” சான்றுகள் கொடுக்கப்பட்டதால்,படம் திரையரங்கில் வெளியானது.“ஏ” திரைப்படங்கள் தமிழ் சினிமாவுக்கு ஒன்னும் புதிதல்ல,ஆனால் “அந்தரங்க” விஷயங்களை மிகவும் வெளிப்படையான வசனங்களை கொண்டும்,காட்சிகளை கொண்டும்,நேரடி தமிழ் படங்கள் வந்ததில்லை.இதனை தமிழ் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன்,வரவேற்று பல நாட்கள் இப்படத்தை ஓட வைத்தார்கள்.காரணம்,தமிழ் சினிமாவில் கதை தட்டுப்பாடுகள் பல ஆண்டுகாலமாகவே இருந்து வருகின்றன.மேலும் பல இயக்குனர்கள் அறைத்த மாவையே திரும்பத்திரும்ப அறைத்து வருகின்றன.அதனால்,அடல்ட் காமெடி என்கின்ற பெயரில் ஆபாசமான சினிமாவாக இருந்தாலும்,இதனை தமிழ் ரசிகர்கள் வரவேற்றார்கள்.பல பெண்களே இப்படத்தை பார்த்து சிரித்து ரசித்தார்கள்,என்பது தனிக்கதை.

 

“இந்த மாதிரியான திரைப்படத்தை செக்ஸ் பிக்ச்சர்னு சொல்லாதீங்க,செக்ஸ் பிக்ச்சர்னா இன்டர்நெட்ல வரக்கூடிய “ப்ரான்” வீடியோதான்.நான் எடுத்தது,தணிக்கை துறையே அங்கிகரித்த,“ஏ” திரைப்படம்தான்.என பொங்கினார் இயக்குனர்.சந்தோஷ் பி ஜெயக்குமார்.அதன் பின்னர் யார் என்ன சொன்னாலும் காதில் வாங்காது,மீண்டும்,“இருட்டு அறையில் முரட்டு குத்து” என்கின்ற அடல்ட் காமெடி திரைப்படத்தை இயக்கினார் சந்தோஷ்.முந்தைய படத்தை காட்டிலும்,இப்படம் இன்னும் தூக்கலாக இருந்தது.சந்தோஷ்,எதிர்பார்த்த மாதிரியே இப்படமும் ஹிட்.இப்படத்திற்கும் எதிர்ப்புகள் வர.இயக்குனர் மீண்டும் பொங்கினார்.நான் இயக்கிய இரு படங்களுமே சூப்பர் ஹிட் .அடுத்ததாக ஒரு நல்ல படத்தை இயக்க முடிவு செய்துள்ளேன்,அப்படம் கண்டிப்பாக ஓடாது.என கூறினார்.

அதே போல் அவர் ஒரு நல்ல படத்தை இயக்கினார்,அவர் கூறியது போலவே படம் ஓடவில்லை.அப்படம் தான்,ஆர்யா நடித்த “கஜினி காந்த்”.அதன் பின்னர்,மீண்டும் அடல்ட் காமெடி கதைகளை தேர்வு செய்து இயக்கினார்.அப்படத்தின்,போஸ்டர் ஒட்டப்பட்ட போது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன.இயக்குனர்.பாரதிராஜா உட்பட பல திரைக்கலைஞர்களும் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.பாரதிராஜாவுக்கும் சந்தோஷுக்கும் முட்டல்கள் ஏற்பட்டன.பின்னர் சமாதானமாகினர்.அப்படம் தான் சமீபத்தில் வெளியாகி 2 வாரங்களாக ஓடிக்கொண்டிருக்கும் “இரண்டாம் குத்து”.இதற்கு அடுத்ததாக,இதேபாணியில் ஒரு திரைப்படத்தை எடுக்க முடிவு செய்துள்ளார்,சந்தோஷ்.அதற்கு “மிஸ்டர் விர்ஜின்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவுப்பு வெளியாகி உள்ளது.நிச்சயம் இப்படத்திற்கும் எதிர்ப்புகள் வரும்.ஆனால்,இயக்குனர் சொல்வது போல் இது மாதிரியான படங்கள் தான் நன்றாக ஓடுகின்றன.இதற்கு,ஒரே தீர்வு நல்ல எழுத்தாளர்கள்,கதாசிரியர்கள்,நல்ல நாவல்களை தேடி தமிழ் இயக்குனர்கள் செல்லவேண்டும்.

Irandam_Kuthu

Top