Main Menu

What’s New?

Connect With Us

ராட்சசனாக மாறும் கைப்பேசி| வாசகி பகிரும் தகவல்கள்!

Read Carefully

SHARES

முன்பெல்லாம்,திருடர்கள் நம் வீட்டிற்குள் வரக்கூடாது என்று கதவுகளை நன்றாக பூட்டிக்கொண்டோம்.ஆனால் இன்றோ,வீட்டிற்குள்ளே திருடர்கள் இருக்கிறார்கள்.ஆம்…! ஒரு வீட்டில் நான்கு நபர்கள் இருந்தால்,ஒவ்வொருவரிடமும் ஒரு திருடன் உள்ளான்.என்ன யோசிக்கின்றிர்கள்?நம் வாழ்வில் ஒரு பகுதியாக,இல்லை…இல்லை!..நம் வாழ்க்கையாகவே மாறிய,நம் வாழ்க்கையை மாற்றிய,நாம் பயன்படுத்தும் “ஸ்மார்ட் போன்ஸ்” அதாவது கைபேசிதான்,அந்த திருடன்.கணவன்,மனைவிக்குள் நெருக்கம் இருக்கிறதோ இல்லையோ,கைபேசியுடன் நெருக்கமாகிவிட்டோம் நாம்,அனைவரும்.காலையில் எழுந்தவுடன் இறைவன் படத்தையோ அல்லது நமக்கு பிடித்தவரின் முகத்தையோ பார்த்து விழித்தது போக,இன்று நம் விடில் பேஸ்புக்,இன்ஸ்டாகிராம்,வாட்ஸ் ஆப் போன்றவற்றோடு தொடங்கிவிட்டது.

நம் ஆட்கள் காலைக் கடன் செய்யும் போது கூட கைப்பேசியை விடுவதில்லை.அங்கேவயும் சென்று ஏதேனும் பார்ப்பது வாடிக்கையாகிவிட்டது.தாய்மார்களுக்கு நன்கு தெரியும் தன் பிள்ளைகள் எவ்வளவு சாப்பிடுவார்கள்,எதை சாப்பிட்டால் என்ன சத்து கிடைக்கும்,என்று…ஆனால் அதற்கும் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து,அதில் குறிப்பிட்டிருக்கும் கலோரி அளவுகளை சாப்பிட்டால் தான் உடலுக்கு நல்லது என்று முட்டாள் தனமாக எண்ணுகிறார்கள்.கைகளில் கடிகாரம் கட்டிக்கொண்ட போதிலும்,கைப்பேசியில் இருக்கும் நேரத்தைப் பார்க்கின்றோம்.டேப் ரெக்கார்டர்,கேசெட்,போன்றவையெல்லாம் மலையேறி தற்போது எம்பி3,எம்பி4 என்று கைபேசியிலேயே நாம் கேட்கிறோம்.வீட்டில் இருந்த அத்துணை பழைமைகளும் கைபேசினால் மெல்ல மெல்ல அழிந்து விட்டன.

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உடற்பயிற்சியையோ,அல்லது நடைப்பயிற்சியையோ செய்ய கூட செயலியையே பயன்படுத்துகிறோம்.இதனைக்கூட நாம் மன கணக்கீடு செய்யக்கூடாதா?ஏன் செயலி வேண்டும்? நமது வீட்டில் “லேன்ட் லைன்” இருந்தவரை,பெரும்பாலான எண்களை நாம் நினைவில் வைத்திருந்தோம்.இன்றோ,அது தழைகிழாக மாறி,நாம் பயன் படுத்தும் ஜியோ எண்களைக்கூட நினைவில் வைத்திருக்க முடியவில்லை…!உண்மைதானே..! அதே போல் காலையில் எழுந்திருக்க கடிகாரத்தில் அலாரம் வைப்போம்,அதுவும் மாறி இப்போது கைபேசியில் அலாரங்களை வைக்கத்தொடங்கிவிட்டோம்.இதனால் கடிகாரங்களும் அழிந்து வருகின்றன.இவைகள் அனைத்தும் வெறும் 10 வருடங்களில் நடந்த மாற்றங்கள் என்றால் நம்பமுடிகிறதா?

ஆனால் கைப்பேசி,ஆபத்து காலத்தில் உற்ற துணையாக இருப்பதை மறுக்கமுடியாது.ஆம்..! அமெரிக்காவில் வசிக்கும் தங்கள் பிள்ளைகளை,நொடிப்பொழுதில் இந்தியாவில் வசிக்கும் பெற்றோர்கள்,வீடியோ கால் மூலமாக தொடர்புக் கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள்.காய்கறி,பழவகைகள்,மளிகை சாமான்கள் போன்றவைகளை கைப்பேசி மூலமாக ஆர்டர் செய்தால் வீடுதேடியே வந்துவிடுகின்றன,இந்த வசதி கொரோனா காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.பழைய நண்பர்களை பேஸ்புக் மூலமாக ஒன்றுசேர்த்தல் போன்றவைகள் எல்லாம் கைப்பேசி நமக்கு கொடுத்த வரப்பிரசாதமே! இதையெல்லாம் தாண்டி கைப்பேசியின் கோரத்தாண்டவம் ஒன்று உள்ளது.அதனை நான் உங்களிடம் கூறியதும் அதிர்ச்சியளிக்கலாம்….

 

நமது வங்கி கணக்கு,ஆதார் எண்கள் போன்றவை நம் கைப்பேசி எண்களோடு இணைக்கப்பட்டுவிட்டதால்,சைபர் கிரைம் அதிகமாகிவிட்டது.சமீபத்தில்,எனக்கு நடந்த ஒரு சம்பவத்தை உங்கள் முன் பகிர்ந்துக் கொள்கிறேன்.எனது ஜிமெயில் அக்கவுன்ட்டை பார்த்துக்கொண்டிருந்தபோது,அதில் ஸ்பேம் மெசேஜ் என் கண்ணில்பட்டது.பார்த்தவுடன் அதை டெலிட் செய்வது என் வழக்கம்.அன்றும் டெலிட் செய்யலாம் என்று என்னியபோது,எனக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டுயிருந்தது.நான் ஒரு செயலிக்கு பயன்ப்படுத்திய பாஸ்வேர்டின் ஒரு பகுதி எனக்கு காட்டியது.அதன் உள்ளே சென்றேன்.“உங்கள் செல்போன் ஹேக் செய்யப்பட்டுவிட்டது.நீங்கள் $1036 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 77000 பணத்தை செலுத்தினால்,விட்டுவிடுவேன் இல்லையெனில் உங்கள் முகம் பதிவு செய்யப்பட்ட வீடியோவை,உங்கள் கான்டக்ட்யில் உள்ளவர்களுக்கு அனுப்பிவிடுவேன்,என்றும்.மேலும் காவல் துறைக்கு சென்றாலும் எங்கள் வெப்சைட்டை அவர்களால் ட்ராக் செய்யமுடியாது என்று பயமுறுத்தும் அளவிற்கு அதில் குறிப்பிட்டிருந்தது.

இந்த மெயில் வந்து 15 நாட்கள் ஆகிறது.நான் அது வந்ததை கவனிக்கவில்லை.அப்போதுதான் நான் யோசித்தேன்.நாம் டவுன்லோட் செய்யும் செயலி செயல்பட வேண்டுமெனில்,“அலோ”[Allow] என்று கிளிக் செய்துவிடுகிறோம்.இங்குதான் தவறுகள் நடக்கின்றன.”அலோ ஆப் டு அக்சஸ் யுவர் கேமரா,கான்டக்ட்ஸ்,லொகேஷன் என்று குறிப்பிட்டிருக்கும்.அதனை கவனமாக படிக்கவும்,அதே போல், அதை கேன்சல் செய்தால் செயலியை நாம் பயன்படுத்தமுடியாது.இது எந்த செயலியாக இருந்தாலும் இதே நிலைதான்.ஒரு செயலியை பயன்படுத்த எதற்கு நமது கேமரா,கான்டக்ட்ஸ் போன்றவைகளை ஏன் அலோ செய்யவேண்டும் என்று கேட்கிறது?நமக்கு தெரியாது உலகில் ஏதோ ஒரு மூலையில் நம்மை எவளோ ஒருவன் கவனித்துக் கொண்டே இருக்கின்றான்.

இதை அறியாமல் எவ்வளவு அஜாக்ரதையாக நாம் வாழ்ந்துக்கொண்டுயிருக்கிறோம்.இதில் சோகம் என்னவென்றால்,வேறு வழியே இல்லை என்பது போல் மாட்டிக்கொண்டுள்ளோம்.கைப்பேசியின் பயனை விட பல மடங்கு ஆபத்து நிறைந்துள்ளது.கைப்பேசி உடல்நலத்திற்கும் தீங்கானது.அதிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சுகள் நமக்கு பல நோய்களை உண்டாக்குகிறது.எனவே கைப்பேசியை கவனமுடன் கையாள வேண்டும்.குறிப்பாக பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் கைப்பேசியை பயன்படுத்தவேண்டும்.இணைவழியாக ஒருநாளுக்கு தமிழ்நாட்டில் மட்டும் 400ருக்கும் மேற்பட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன.பெண்கள் தவிர,ஆண்களும் கைபேசியினால் துயரம்கொண்டுவருகின்றன.குறிப்பாக ஆன்லைனில் சூதாடி பல லட்சங்களை இழந்தும்,தற்கொலை செய்துக்கொண்டும் வருகின்றன என்கின்ற செய்தி வருகிறது.

கைப்பேசியில் மாட்டிக்கொள்ளும் லேட்டஸ்ட் வருகை சிறார்கள்.ஆன்லைனில் கேம் விளையாடி,ஒரு கட்டத்தில் வீட்டிற்கு தெரியாமல் பணத்தை கட்டி,தோற்று மன அழுத்தம் ஏற்ப்பட்டு தற்கொலை செய்து கொள்கின்றார்கள்.கைப்பேசியால் ஏற்ப்படும் இத்தகைய பிரச்சனைகளை நம் சமூகம் உடனடியாக கண்டு சரிசெய்யவேண்டும். மக்களாகிய நாம் இப்பிரச்சனையை அரசு மற்றும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுபோக வேண்டும்.அரசும்,அதிகாரிகளும் இதற்க்கு நிரந்தர தீர்வுக்கான வேண்டும்.

ஊர் பெயர்,
வெளியிட விரும்பாத,
வாசகி.

Top