இப்போ வீதி வீதியாக வரும் வேட்பாளர்கள்|ஜெயித்த பின்?

 இப்போ வீதி வீதியாக வரும் வேட்பாளர்கள்|ஜெயித்த பின்?

தமிழகத்தில் காமராஜர் ஆட்சிக்கு பின்னர், சொல்லும் படியாக இல்லை. எம்.ஜி.ஆரின் ஆட்சியை ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளலாம். மற்ற படி எந்த ஆட்சியையும் மக்கள் ஓர் அதிருப்தி கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறார்கள்.

kamaraj-pics

ஓட்டு சேகரிக்க, தொகுதி பக்கம் வரும் வேட்பாளர்கள். வெற்றி பெற்ற பின்னர், அவர்களின் தொகுதி எது என்பதே தெரியாது. தெருத்தெருவாக வருவார்கள், வயதானவர்களின் காலில் விழுவார்கள், கைகுலுக்குவார்கள், கும்மிடு போடுவார்கள், மைக்கினை பிடித்து நான் அதை செய்வேன், இதை செய்வேன் என வசனம் பேசுவார்கள். அதையெல்லாம் நம்பி வாக்களித்து, அவர்களை வெற்றி பெற செய்வோம். ஆனால், குறைந்தது தொகுதி பக்கம் கூட எட்டி பார்க்கமாட்டார்கள்.

politics-clipart

ஒரு வேட்பாளர், ஓட்டுக்களை சேகரிக்க வீதி வீதியாக நடந்து வந்து அப்பாவித்தன முகத்துடன் கேட்பார்.வெற்றி பெற்ற பின்னர், முன்னே இரண்டு கார்கள் செல்லும், பின்னே இரண்டு கார்கள் செல்லும்  நடுவில் இவரின் கார் செல்லும். காரை விட்டு கிழே இறங்கி மக்களின் பிரச்சனைகளை என்றாவது ஒரு நாள் கேட்டதுண்டா? இது தான் காலம் காலமாக நடக்கிறது.

politics car.

 234 தொகுதியில், இன்னமும் சரிவர அடிப்படை வசதிகள் கூட இல்லை:

✍ தமிழகத்தில், பல இடங்களில் குடிநீர் வசதிகள் இல்லை. கிராமபுறங்களில், இன்றும் பல கிலோமீட்டர் நடந்து சென்றுதான் குடிநீரை பெற வேண்டும்.

✍ கிராமப்புற மாணவர்கள் படிக்கும் வசதிக்காக, ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு ஒரு தொடக்கப்பள்ளியும், மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு ஒரு நடுநிலைப்பள்ளியும், ஐந்து முதல் ஆறேழு கிலோமீட்டர் தூரத்திற்கு ஒரு உயர்நிலைப்பள்ளிகளையும் கட்டினார் காமராஜர். ஆனால், போதிய  மாணவர்களின் சேர்க்கை இல்லாத காரணத்தால் இவைகளை ஒவ்வொன்றாக மூடி வருகின்றார்கள்.

jyothika

✍ என்னதான் அரசு சார்பாக இலவச மருத்துவமனைகள் இருந்ததும், அதற்கு ஜோதிகா போன்ற நடிகைகளின் உதவி தேவைப்படுகிறது. அரசு மருத்துவமனைகள் உயர் அறுவை சிகிச்சைகள் பலவும் செய்து சாதனைகளை செய்திருந்தாலும், அவர்கள் அனைவரும் ஏழைகள் தானே? பணக்காரர்கள் இல்லையே? பணக்காரர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனைகளில் தானே சிகிச்சை பெறுகிறார்கள்.! ஏன்?….அப்போது அரசு மருத்துவமனைகளில் ஏதோ குறை பாடுகள் உள்ளன. தனியார் மருத்துவமனைகளில், கட்டணங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.

✍ பல இடங்களை சாலைகள் இல்லை, பேருந்து வசதிகள் இல்லை, மின்சாரம் இல்லை, நூலகம் இல்லை, மாறாக “டாஸ்மாக்” உள்ளது.

vadapazhani-pics-1

✍ படிப்படியாக, மது விளக்கை அமல்படுத்தப்படும் என்றார்கள். இம்முறையும், தேர்தல் அறிக்கையில் உள்ளது. ஆனால், அது படிப்படியாக உயர்ந்துக்கொண்டே செல்கிறது.

இதை கூட  பிரதிநிதிகள், இத்தனை ஆண்டுகளாக நிறைவேற்ற முடியவில்லை. பாவம்…அவர்களுக்கு நிதிபோதவில்லையோ?

debateki19

ஒரு எம்.எல்.ஏவின் மாத வருமானம் ஒன்றை லட்சம் ரூபாய். இது போக, வாகனங்கள், எரிபொருள் செலவுகள், பெரிய குடியிருப்புகள், 5 வேலை ஆட்கள் என ஏராளமான வசதிகள் இலவசமாக மக்களின் வரி பணத்தில் மூலமாக வழங்கப்படுகிறது.

மேலும், ஒரு தொகுதிக்கு கோடிக்கணக்கில் நிதி கொடுக்கப்படுகிறது. இத்தனை இருந்தும், தொகுதி பக்கம் வராது மக்களின் பிரச்சனைகளை பற்றி கேட்காது தொகுதியின் பணத்தை வீண்ணடிப்பது நியாயமா? இந்த நிதி பணத்தை வைத்து தொகுதிக்கு நிறைய நல்லது செய்யனாமே? நிதி பணம் எங்க? எங்கே போனது?

Voters_PTI

இவைகள்யெல்லாம் எப்போது மாறப்போகிறது? மக்கள் கையில் உள்ளது.!.!.!

 

மேலும் படிக்க: 

சென்னையில் 577 வாக்குச்சாவடி பதற்றமானவை!

ஏப்ரல் 5ஆம் தேதி வரை தபால் ஓட்டு பெறப்படும்:

Follow us on :

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top