மரங்களை வெட்டலாமா?|வெட்டியதை யார் அள்ளுவது?

ஒரு மரத்தை வெட்டினால் பத்து மரங்களை நடவேண்டும் என்று நீதிமன்றம் தமிழக அரசுக்கு சமீபத்தில் அறிவுறுத்தியது.இந்நிலையில் சென்னை சாலிகிராமத்தில் அருணாச்சலம் ரோட்டில் “சூர்யா மருத்துவமனை”, எதிரில் சில மரங்களை வெட்டப்பட்டும் ,சில மரத்தின் கிழைகளை வெட்டப்பட்டும் இருந்தன.மேலும் இதனை அப்புறப்படுத்தப்படாமலும் இருந்தன.வெட்டப்பட்ட கிழைகள்,ரோட்டில் கிடந்ததால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.மருத்துவமனைக்கு வருபவர்கள் மிகுந்த சிரம்மத்துக்குள்ளானார்கள்.சேலம் அருகே எட்டு வழிச்சாலை நடைபெரும்போது,பல ஆயிரம் மரங்கள் வெட்டப்படும்.இதனை குறிப்பிட்டு சமூக ஆர்வலர்கள் சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

அப்போது வேதனை தெரிவித்த நீதிபதி,மரங்களை வெட்ட கடும் கண்டனங்களை தெரிவித்ததோடு “ஒரு மரத்தை வெட்டினால்,அதற்க்கு மாறாக பத்து மரங்களை நடவேண்டும்” என்று உத்தரவிட்டார்.இதனை,அரசும்,அதிகாரிகளும் காற்றில் பறக்கவிட்டுயுள்ளன.ரோட்டில் வளர்ந்துள்ள மரங்கள் மழை காலங்களில் பெரும்பாலும் விழக்கூடும்.அப்படி விழும் பட்சத்தில் அந்த சமயத்தில் அதிகாரிகளுக்கு தொந்தரவரக்கூடும்.இதனால் முன்கூட்டியே சில இடங்களில் அதிகாரிகள் மரங்களை வெட்ட தொடங்கின்றார்கள்.முன்புபோல் இல்லாமல் மக்களும் மரங்களை வளர்ப்பதில் ஆர்வம்காட்டுவதில்லை அல்லது போதிய இடவசதிகள் இல்லை.சமீபத்தில் ஒரு கல்யாண மண்டபத்திற்கு மும்பு ஒரு வயதான மரம் இருந்தது. அந்த மரத்திற்கு யாரோ ஒருவர் விஷஊசி செலுத்தியுள்ளார்.பின்னர் இதனை கண்டு அந்த மரத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது, வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டது.

இது போல் மக்களும் மரத்தின் மீது அக்கறையின்றி இருக்கின்றார்கள்.இன்று அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்திற்கு மரம் வெட்டப்படுவதின் காரணமாகவும் இருக்கக்கூடும்.ஆம்!….பத்து ஆண்டிற்கு முன் ஒரு இழநீரின் விலை பத்து ரூபாய் மட்டும்தான்.இன்றோ நாற்பது முதல் ஐம்பது வரை.அதுவும் நீரின் அளவு மிக குறைந்தே உள்ளது.இதற்கு மிக முக்கியக்காரணம், தென்னைமரத்தின் பற்றார் குறையே!…. நம் தமிழ்நாட்டில் மரங்களின் இரு கண்களாக கருதப்படுவது,தென்னை மரமும்,பனைமரமும் தான்.ஆனால் அவை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து நாம் கட்டடங்களாக மாற்றிவிட்டதின் விளைவே இவை.“கிளி வளர்த்தேன் பறந்து விட்டது”,”அணில் வளர்த்தேன் ஓடிவிட்டது”,மரம் வளர்த்தேன் இரண்டும் வந்துவிட்டது,என்றார் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம்.அதனை நாம் கடைபிடித்தே ஆகவேண்டும்.மரங்களை, மக்கள் அனைவரும் ஆர்வமாக வளர்க்கவேண்டும்.அதனை வெட்டாதவாறு அதிகாரிகளும்,அரசும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top