Main Menu

What’s New?

Connect With Us

பறவை காய்ச்சல் பரவுவதால் முட்டை, சிக்கன் சாப்பிடலாமா?

Read Carefully

SHARES

பறவை காய்ச்சல் பரவுவதால் முட்டை, சிக்கன் சாப்பிடலாமா?

farm-eggs

பறவைக் காய்ச்சல் பரவும் சமயத்தில் முட்டை, சிக்கன் சாப்பிடுவது பாதுகாப்பானதா என்பது குறித்து நிபுணர்கள் அளித்த விளக்கங்கள் வருமாறு:

* முட்டை, சிக்கன் சாப்பிடுவதால் பறவைக் காய்ச்சல் பரவும் என்பதற்கு சொற்ப அளவிலான ஆதாரங்களே உள்ளன.
* வைரஸ் பாதிக்கப்பட்ட கோழியாகவே இருந்தாலும் கூட நன்கு சமைத்தால் அதிலுள்ள வைரஸ்கள் இறந்து போகும்.
* சிக்கன், கோழியை நன்கு சூடுபடுத்தும் போது அதன் மீதுள்ள வைரஸ்கள் இறந்துவிடும். அவைகளுக்கு உள்ளே இருக்கும் வைரஸ்கள் கூட இறந்து விடும்.

chicken

* எனவே, 70 டிகிரி செல்சியல் சூட்டில் இறைச்சியின் அனைத்து பாகங்களையும் சமைத்து சாப்பிட வேண்டும்.
* முட்டையை ஆப்பாயில், ஒன்சைடு ஆம்லெட் என அரைவேக்காட்டில் சாப்பிடாமல், நன்கு வேக வைத்து சாப்பிடுவது நன்று.
* முட்டையை வேக வைத்த பிறகு மஞ்சள் கரு திடமாக இருக்க வேண்டும். அது தண்ணீர் போல் உடைந்து ஒழுகினால் அந்த முட்டையை சாப்பிடுவதை       தவிர்க்கவும்.

peeling-eggs

* பறவைகளின் மலம் மற்றும் பிற நீர்த்துளிகள் மூலமாகவே பரவும்.
* இது மனிதர்களுக்கு தொற்றும் வாய்ப்புண்டு. ஆனால், மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவாது.
* பறவைக் காய்ச்சல் ஏற்பட்டால் காய்ச்சல், இருமல், சளி, நெஞ்சு வலி, தொண்டை வறண்டு போதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

Top