கொரோனா காரணமாக நாடு முழுவதும் இ.பாஸ் நடைமுறையை அமலாக்கிய மத்திய அரசு,கடந்த 1ம் தேதி முதல் இ.பாஸ் தேவையில்லை என்று அறிவித்தது மத்திய அரசு.இருப்பிலும் தமிழகத்தில் இ.பாஸ் நடைமுறை தொடர்வதால் மக்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.இதனால் விண்ணப்பிக்கும் அனைவர்க்கும் இ.பாஸ் வழங்கப்படும் என்று கடந்த 17ம் தேதி தமிழக அரசு அறிவித்தது.ஆனால் இ.பாஸினை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக முழுவதிலும் கோரிக்கை விடப்பட்டது.
இது குறித்து தலைமைச் செயலர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.இதில் டிஜிபி திரிபாதி,சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார்,சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் மற்றும் உயரதிகாரிகள் நேரடியாக பங்கேற்றார்கள்.மேலும் அணைத்து மாவட்ட கலெக்டர்களும் வீடியோ கான்பரன்சிங் முறையில் பங்கேற்றார்கள்.பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய ஆலோசனை மாலை 6 மணி வரை நீடித்தது.
ஆலோசனையில் நடந்த முக்கியமானவை:
1.)இ.பாஸ் முறையை ரத்து செய்தால்,கொரோனா பாதிப்பு கண்டறிவதிலும்,தொற்று பரவலைத் தடுப்பதிலும்,பெரும் சிரமம் ஏற்படும் என ஆலோசிக்கப்பட்டது.
2.)அதே வேளையில் மத்திய உள்துறையின் உத்தரவை மீறவும் இயலாது.
3.)ஆகையால் இ.பாஸ் ரத்து செய்யப்பட்டால்,அதனால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்கும் வழிமுறைகள் பற்றி இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.மேலும்
4.)செப்டம்பர் 1ம் தேதி முதல் அரசு பஸ் போக்குவரத்தைத் தொடங்குவதற்கு சாத்தியக்கூறு உள்ளதா என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,27ம் தேதி முதல் டெல்டா மாவட்டங்களில் கொரோனா நிலவரம் குறித்து ஆய்வு நடத்த உள்ளார்.இது முடிந்த பின் 29ம் தேதி மீண்டும் சென்னை திரும்புகிறார்.அதன் பின் செப்டம்பர் 1 முதல் அமலாக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மருத்துவக்குழு மற்றும் கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துவார்.அப்போது இ.பாஸ்,மற்றும் அரசு பஸ் போக்குவரத்து தொடங்குவது பற்றிய முடிவுகளும் தீர்மானிக்கப்படும் என்று ஆலோசனை நடத்தப்பட்டது.