“ஆண்டி இந்தியன்” படத்தின் ரிலீஸ் அப்டேட் : ப்ளூ சட்டை மாறன் அறிவிப்பு.

blue sattai maran anti indian movie

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமையும் புதுப்படங்கள் வெளியாகும். அதனை ரசிகர்கள் திரையரங்கில் சென்று பார்த்து வந்தனர். ஆனால், தற்போது வெளியான படங்களின் விமர்சன வீடியோக்களை யூ-டியூபில் பார்த்துவிட்டு சிலர் படம் பார்க்க செல்கின்றனர். சிலர் படம் பார்த்த பின்பு விமர்சனத்தை கண்டு களிக்கின்றனர். அந்த வகையில் விமர்சனத்திற்கென்றே ஒரு தனி முத்திரையை பதித்துள்ளவர் ப்ளூ சட்டை மாறன். படத்தை பார்ப்பவர்களை விட இவரின் விமர்சனங்களை பார்ப்பவர்கள் அதிகமாகி கொண்டே வந்தனர்.

பொதுவாக எல்லா படங்களையும் விமர்சித்து அவருக்கென இருக்கும் தனி பாணியில் பேசுவார். அது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அவர் விமர்சிக்காத படங்களை கைவிட்டு என்னும் அளவிற்கு தான் இருக்கும். அந்த அளவிற்கு எல்லா படங்களையும் விமர்சித்து விட்டார். நீல நிற சட்டை அணிந்துகொண்டு படத்தை தன் பாணியில் விமர்சிப்பார். அதுவே அவருக்கு ப்ளூ சட்டை மாறன் என்று பெயர் வர காரணம். எல்லா படங்களையும் விமர்சிக்கிறாரே இவர் ஒரு படம் எடுத்தால் எப்படி இருக்கும் என பார்வையாளர்களுக்கு தோன்றியது. அதனை பூர்த்தி செய்யும் வகையில் மாறன் ஒரு புதிய படத்தை இயக்கியுள்ளார். அதன் பெயர் “ஆண்டி இந்தியன்” என அறிவித்தார். பெயரே சர்ச்சைக்குரியதாக இருப்பதால் பல சிக்கல்கள் இப்படத்திற்கு ஏற்பட்டது.

சென்சார் போர்டு இப்படத்தை பார்த்துவிட்டு முழுவதுமாக புறக்கணித்து விட்டது. அதனால், படத்தை ரிவைசிங் கமிட்டியிடம் கொண்டுபோகவுள்ளதாக கூறியுள்ளார். மேலும், ஆண்டி இந்தியன் படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன். படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகும் தேதி தான் அது. இந்தவாரம் ரமலான் பண்டிகையன்று படத்தின் MOTION POSTER-யை வெளியிடப்போவதாக கூறியுள்ளார். மேலும், படம் குறித்த தேதியில் கட்டாயம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் BLUE SATTAI MAARAN.

 

 இந்தியன் 2 படத்தின் தாமதத்திற்கு லைக்கா தான் காரணம் : இயக்குனர் ஷங்கர் மனு.

 

 

 

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top