Main Menu

What’s New?

Connect With Us

6 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல்|மத்திய அரசு எச்சரிக்கை!

bird-fever-future
Read Carefully

SHARES

பறவைக் காய்ச்சல்

கேரளா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. கொரோனா வைரஸ்  பரவியுள்ள நிலையில், தற்போது பறவைக் காய்ச்சலும் இந்தியாவில் தலை தூக்கியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. மேலும் ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், அரியானா மற்றும் குஜராத் மாநிலங்களில் இது உறுதியாகி உள்ளது. அதே போல் உத்தரப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் சந்தேகத்துக்கிடமான வகையில் பறவைகள் இறக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன.

bird-flu-1

டெல்லியில் 16 பறவைகள் மர்மமாக உயிரிழந்து உள்ளதால், அதற்கான காரணத்தை அறிய அவற்றின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதனால், நீர்நிலைகள், பண்ணைகள், விலங்குகளின் சரணாலயங்கள் மற்றும் பறவைகள் தொடர்பான சந்தைகளை தீவிரமாகக் கண்காணிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

bird-fever00

இமாச்சலப் பிரதேசத்தின் கங்ரா மாவட்டத்தில் பாங் வனவிலங்குகள் சரணாலயம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் வந்த வெளிநாட்டு பறவைகள் மொத்தமாக உயிரிழந்தன. மொத்தம் 3,409 பறவைகள் உயிரிழந்ததால் பீதி ஏற்பட்டது. அவற்றை ஆய்வு செய்த பிறகு எச்5என்1 வகை பறவைக் காய்ச்சல் என்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து அந்த  பகுதி முழுவதும் உடனே சீல் வைக்கப்பட்டு, கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாகூர் நேற்று இங்கு நேரில் ஆய்வு செய்தார்.

bird fever 112

சட்டீஸ்கர் மாநிலம், பலோட் நகரில் உள்ள போண்டி கிராமத்தில் ஒரு காக்கை திடீரென கீழே செத்து விழுந்தது. சந்தேகமடைந்த கிராமவாசிகள் அதனை தீ வைத்து எரித்தனர். நேற்று முன் தினம் மீண்டும் 3 காக்கைகள் ஒரே நாளில் இறந்து கிடந்தன. இது பற்றி தகவல் கிடைத்ததும், அதிகாரிகள் அங்கு சென்று அவற்றின் உடல் பாகங்களை பரிசோதனைக்காக அனுப்பினர்.

இதனால்,மக்கள் மேலும் தங்களை தூய்மை படுத்திக்கொள்வதில் தீவிரம் காட்ட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

                                                                                           மேலும் படிக்க: அரசியலுக்கு ரஜினி வந்திருந்தால்?|இனி அரசியலில் என்ன நடக்கும்?

Top