SHARES
இதெல்லாம் எப்போ நடித்தார்? பிக் பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்னதாகவே இவ்வளவு படங்களை நடித்து முடித்துள்ளாரா ஆரி. உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்துவழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 வது சீசனின் வெற்றியாளர் ஆரி அர்ஜுனன். அதற்கு முன்னதாக, நெடுஞ்சாலை படத்தின் மூலம் தனது நடிப்பால் பலரது கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ஆரி அர்ஜுனன். இவர் நயன்தாரா நடிப்பில் வெளியான “மாயா” மற்றும் நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார்.
பிறகு, பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 வது சீசனில் கலந்துகொண்டார். பிக் பாஸ் வீட்டில் உள்ள இதர போட்டியாளர்களுடன் சில மனக்கசப்பான நிகழ்வுகள் நடந்திருந்தாலும் ஆரிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அவரின் நேர்மையும், தைரியமும் தான் அவரை வெற்றியாளராகவும் ஆக்கியது என கூறலாம்.
இது ஒரு புறம் இருக்க ஆரியின் நடிப்பில் உருவாகிவரும் சில படங்களின் அறிவிப்புகளும், போஸ்டர்களும், டீசர்களும் வெளியாகின. அவற்றில் சில அவர் பிக் பாஸ் வீட்டினுள் இருக்கும் போதே வெளியாகியது. தற்போது வரை 3 படங்களின் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அவை, “எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்”, “அலேகா”, ” பகவான்” படங்களின் அறிவிப்புகள் வெளிவந்தன. 

இவற்றில் “எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்” படத்தின் ட்ரைலர் ஒரு வருடம் முன்னதாகவே வெளியாகிவிட்டது. அதனை தற்போது தூசிதட்டி வெளியிட படக்குழு அவ்வப்போது போஸ்டர்களை வெளியிட்டு வருகிறது. பகவான் படத்தின் Title Motion Poster வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. “அலேகா” படத்தின் ட்ரைலர் வெளியாகி அதுவும் நல்ல வரவேற்பை பெற்றது. அலேகா படத்தில் ஐஸ்வர்யா தத்தாவுடன் இனைந்து நடித்துள்ளார் ஆரி அர்ஜுனன்.

மக்கள் மனதில் மிகப்பெரிய இடம் பிடித்துள்ள ஆரி அர்ஜுனனுக்கு அடுத்தடுத்த படங்கள் வெற்றியடைய Chennaiyil.com சார்பாக வாழ்த்துகிறோம்.
Also Read: ஷங்கரின் அடுத்த பிரம்மாண்ட படம் : யாஷ், ராம் சரண் நடிக்கவிருப்பதாக தகவல்.
Follow us on Facebook and Instagram:
SHARES