Main Menu

What’s New?

Connect With Us

“பாரத் பந்த்” இதுவரை|தமிழகத்தில் பாதிப்பில்லை!

706644-bharat-band
Read Carefully

SHARES

 farmers

*விவசாயிகள் சார்பில் இன்று “பாரத் பந்த்”
*திமுக,காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் ஆதரவு.
*தமிழகத்தில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு.
*அமைதியை நிலைநாட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.
*விவசாயிகளின் கடும் போராட்டத்திற்கு மத்தியில்,3 வேளாண் சட்டங்களை நாடாளு மன்ற இரு அவைகளிலும் மத்திய அரசு நிறைவேற்றுவது.

*3 வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார சட்டத்தை எதிர்த்தும்,அந்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் தலைநகர் டெல்லி உட்பட பஞ்சாப்,அரியானா,போன்ற மாநிலங்களில் தொடர்ந்து 10 நாட்களாக பெருமான விவசாயிகள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றன.
*வேளாண் சட்டத்தை நீக்க வாய்ப்பில்லை,அதில் திருத்தங்களை வேண்டுமானால் கொண்டு வருவோம். என மத்திய அரசு திடமாக கூறிவருவதால்,விவசாயிகளுடனான 5 சுற்று பேச்சு வார்த்தையும் தோல்வி அடைந்து விட்டன.
*இதனால்,3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் 8ம் தேதி [இன்று] முழு அடைப்பு போராட்டத்தை “பாரத பந்த்” என்கின்ற பெயரில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அறிவித்தனர்.

 farmers protest

*இப்போராட்டத்திற்கு காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ்,திரிணாமுல் காங்கிரஸ்,ராஷ்டிரீய ஜனதாதளம்,சமாஜ்வாடி,சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் ஆதரவு அளித்துள்ளனர்.
*தமிழகத்தில் திமுக,மார்சிஸ்ட் கம்யூனிஸ்டு,இந்தியன் கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் ஆதரவு தெவித்திருக்கின்றன.

*தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்தை வலுவாக நடத்த திட்டமிட்டுள்ளன.அதே வேலை முழு அடைப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட கூடாது என்பதில் தமிழக அரசும் தீவிரம் காட்டி வருகிறது.
*தொ.மு.ச.உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது.அந்த தொழிற்சங்ககளை சேர்ந்தவர்கள் யாரும் வேலைக்கு வரமாட்டார்கள் என்றும் அறிவித்துள்ளனர்.எனினும் போக்குவரத்துக்கு எந்த வித பாதிப்புகளும்,இடையூறும் ஏற்படக்கூடாது என்பதில் போக்குவரத்து கழகம் உறுதியாக இருந்தன.
*முழு அடைப்பு காரணமாக தமிழகத்தில் 1 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டனர்.

 Chennai-Police

*ஆட்டோ டிரைவர்களில் 80சதவீதத்தினர் தொழிற்சங்கத்தில் இணைத்திருப்பதால் பல ஆட்டோக்கள் ஓடவில்லை.
*நாடு முழுவதும், முழு அடைப்பில் பங்கேற்க யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என விவசாயிகள் அறிவுறுத்தல்.
*விவசாயிகள் முழு அடைப்பை நடத்துவது தங்களுக்காக மட்டுமல்ல நமக்காகவும்தான்-மு.க.ஸ்டாலின்
*தமிழகத்தை பொருத்தவரை பெரியதாக பாதிப்புகள் இல்லை.
*சங்கரன்கோவிலில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது,இதில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் முத்துபாண்டியனை போலீசாரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

bharath bhandh*திருப்பூரில் பேக்கரிகள்,பனியன் கம்பேனிகள்,ஏற்றுமதி தொழில்கள் போன்ற 90% கடைகள் திறக்கப்படவில்லை.
*பெருமான்மையான மாவட்டங்களில்,கார்கள்,ஆட்டோக்கள் ஓடவில்லை…
*விழுப்புரத்தில்,பெண்கள் வீட்டின் முன் விவசாயிகளுக்கு ஆதரவாக கோலமிட்டு தங்களில் ஆதரவை தெரிவித்தனர்.
*நீலகிரியில்,தனியார் வாகனங்கள் ஓடவில்லை அங்கு இயல்பு வாழ்கை பாதிப்பு.
*விருதுநகர் மாவட்டம் கம்யூனிஸ்ட் கோட்டை என்பதால் இங்கு பாதிப்பு அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் ஸ்ரீவில்லிபுத்தூர் உள்பட பல நகரங்களில் பாதிப்பில்லை.

bharath-bandh*ட்விட்டரில்,கவிஞர் வைரமுத்து ஆதரவு.
*திருப்பத்தூரில்,வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு.
*திருவாரூர் மாவட்டத்தில்,22,000 கடைகள் அடைப்பு.
வட நாட்டில் 12 நாட்களாக விவசாயிகள் போராடிவருகின்றன,இது மேலும் போராட்டங்கள் தீவிரமடைய வாய்ப்புள்ளது.ஆகையால்,விவசாயிகளிடம் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தி சுமுகமாக மத்திய அரசு செய்யவேண்டும்.

bharat bandh today

Top