தி பேமிலி மேன் Series-ஐ தடை செய்ய வேண்டும் : தமிழக அமைச்சர் கடிதம்

Ban OTT release of The Family Man2 in Amazon prime Web-series Declained as Anti-Tamils

பிரபல OTT தளமான அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகும் தொடர் “தி பேமிலி மேன்”. இதில், மனோஜ் பாஜ்பாய் கதாநாயகனாக, பிரியாமணி கதாநாயகியாக நடிக்கின்றனர். இதன் முதல் சீசன் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இதன் இரண்டாம் சீசன் வருகிற ஜூன் 4-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதில், நடிகை சமந்தா அக்கினேனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இதன் ட்ரைலர் வெளியாகியது. வெளியானதிலிருந்தே இந்த ட்ரைலர் பல எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். காரணம் என்ன…

வெளியான ட்ரைலரில் சமந்தா அணிந்திருந்த உடை விடுதலை புலிகள் அணிந்திருக்கும் சீருடை போன்று உள்ளது. மேலும், சமந்தா ராஜி என்கின்ற தற்கொலைப்படையை சேர்ந்தவராக நடித்துள்ளார். மேலும், அவர் ஈழத்தில் இருந்து சென்னை வருகிறார்.  வந்து இங்கிருக்கும் ஒரு பெரிய தலைவரை கொலை செய்யும் முயற்ச்சியில் ஈடுபடுகிறார். அதுவும் மனித வெடிகுண்டாக மாறி கொலைசெய்ய திட்டமிடுகிறார். இது மாதிரியான காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்கள் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களின் நல்லிணக்கத்தை கெடுக்கும் விதமாக உள்ளது.

இந்த தொடரின் ட்ரைலருக்கு தமிழ் நாட்டில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. தலைவர்கள் வைக்கோ, சீமான் போன்றோர் இந்த தொடரை வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சரான மனோ தங்கராஜ் இந்த ‘தி பேமிலி மேன்-2’ தொடரை தடை செய்ய வலியுறுத்தி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “ஈழத் தமிழர்களை தவறாகவும், மோசமாகவும் மிகவும் ஆட்சேபத்திற்குரிய வகையில் சித்தரிக்கும் கருத்துகள் அடங்கிய ‘தி பேமிலி மேன்-2’ என்ற கண்டனத்துக்குரிய இந்தித் தொடர் குறித்து தங்களது கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள மேற்கூறிய தொடரின் முன்னோட்டமானது இலங்கையில் ஈழத் தமிழர்களின் வரலாற்று சிறப்பு வாய்ந்த போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகவும், இழிவுப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதம் :

 

நெடிய ஜனநாயக போராட்டக் களத்தில் அவர்களது தியாகங்கள் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அது எந்த வகையிலும் தமிழ் பண்பாட்டின் மதிப்புகளை கொண்டதாக இல்லை. பெருமைமிகு தமிழ் பண்பாட்டை இழிவுப்படுத்தும் வகையிலான கருத்துகளை கொண்ட தொடரை எந்த வகையிலும் ஒளிபரப்புக்கு ஏற்ற மதிப்புகளை கொண்டது என கருத முடியாது.
எடுத்துக்காட்டாக, தமிழ் பேசும் நடிகையான சமந்தாவை பயங்கரவாதியாக காட்சிப்படுத்தி உள்ளது, உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் பெருமையின் மீதான நேரடித் தாக்குதல் என்பதோடு, இது போன்ற உள் நோக்கமும் விஷமத்தனமுமான பரப்புரையை யாராலும் சகித்துக் கொள்ள முடியாது.

இந்த தொடரின் முன்னோட்டம் ஏற்கனவே தமிழகத்தில் வாழும் மக்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே பெரும் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது, இலங்கையில் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கண்ணியத்திற்காக பல ஆண்டுகளாக நமது உடன்பிறப்புகளான ஈழத் தமிழர்கள் போராடி வருகையில், அமேசான் பிரைம் போன்ற நிறுவனம் இது போன்றதொரு பரப்புரையை மேற்கொள்வது அவசியமற்றதாகும்.
மேற்கூறிய தொடரானது, ஈழத் தமிழர்களின் உணர்வுகளை மட்டுமல்லாது தமிழக தமிழர்களின் உணர்வுகளையும் பெருமளவில் புண்படுத்தியுள்ளது. இத்தொடர் ஒளிபரப்பப்பட்டால், மாநிலத்தில் நல்லிணக்கத்தை பேணுவது கடினமாகும்.

இந்த சூழ்நிலையில், அமேசான் பிரைம் ஓ.டி.டி. தளத்தில் ஒளிபரப்பப்படவுள்ள இந்த தொடரை, தமிழகத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதிலும் நிறுத்தவோ அல்லது தடை செய்யவோ உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்களை கேட்டுக் கொள்கிறேன்…” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அமைச்சரின் இந்த செயலுக்கு பல தரப்புகளில் இருந்து வாழ்த்துக்கள் வந்தவண்ணம் உள்ளன. மேலும், தமிழ் மக்களும், ரசிகர்களும் மகிழ்ச்சியடைத்துள்ளனர்.

மேலும் படிக்க:

 

 

 

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top