Main Menu

What’s New?

Connect With Us

சிகரம் தொட்ட பாலச்சந்தர்|K.Balachander Memorial Day:

K Balachander
Read Carefully

SHARES

K-Balachander-movies

தமிழ் சினிமாவின் சிகரத்தை தொட்ட இயக்குனர்.ரஜினிகாந்த்,கமலஹாசன்,ஸ்ரீபிரியா,டெல்லிகணேஷ்,சரத்பாபு,சரிதா,பிரகாஷ்ராஜ்,திலீப்,எஸ்.வி.சேகர்,ஒய்.ஜி.மஹேந்திரன்,மேஜர் சுந்தர்ராஜன்,ராதாரவி,போன்ற 62 நடிகர்,நடிகைகளை அறிமுகப்படுத்தியவர்.கலைமாமணி,பத்மஸ்ரீ,ஏ.என்.ஆர்.தேசிய விருது போன்ற பல விருதுகளுக்கு சொந்தக்காரர்.மேலும் உயரிய விருதான தாதாசாகெப் பால்கே விருதினை பெற்றுள்ளார்.

k.balachandar with rajini kamal

இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், மேடை நாடக இயக்குனர், தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் இவர் பதியாத தடங்களே இல்லை.106 திரைப்படங்களில் இயக்குனராக,நடிகராக,எழுத்தாளனாக பணியாற்றியுள்ளார்.இத்தனைக்கும் சொந்தக்காரர் நம் இயக்குனர் சிகரம்.கே.பாலசந்தர்.அவருக்கு இன்று 6ஆம் ஆண்டு நினைவு தினம்.அவரின் சுவாசசிவமான சில தகவல்களை சென்னையில்.காம் பகிர்ந்துக்கொள்கிறது.

k.balachandhar

  • தமது இயக்கத்தில் பாலச்சந்தர் அதிகமாகப் பயன்படுத்திய நடிகர்கள் ஜெமினி கணேசன், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், கமலஹாசன், முத்துராமன் ஆவர்.ஆனால் நாகேஷ் தான் இவருக்கு மிக விருப்பமான நடிகர்களில் ஒருவராக மட்டுமல்லாது, அவரது நண்பராகவும் இருந்தவர். நடிகையரில், சௌகார் ஜானகி, ஜெயந்தி, சுஜாதா, சரிதா ஆகியோரைக் குறிப்பிடலாம்.
  • balachandhar-with-nagesh
  • ஸ்ரீதரைப் போல, பாலச்சந்தரும், தமது துவக்க மற்றும் இடைக்காலப் படங்களில் ஜெமினி கணேசனை,வெகுவாகப் பயன்படுத்தியிருந்தார். தாமரை நெஞ்சம், இரு கோடுகள், கண்ணா நலமா, புன்னகை, வெள்ளி விழா, நூற்றுக்கு நூறு ஆகியவை அவற்றில் அடங்கும்.
  • Noottrukku_Nooru
  • 1970ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் அவர் இயக்கிய அரங்கேற்றம் என்னும் திரைப்படம், அதன் கருத்துக்காகவும், கையாளுமைக்காகவும், அது வெளியான காலகட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
  • arangetram
  • சிவாஜி கணேசன் நடிப்பில், பாலச்சந்தர் இயக்கிய ஒரே படம் “எதிரொலி”.1971ஆம் ஆண்டு வெளியான இப்படம் தோல்வியடைந்தது.
  • Ethiroli_poster
  • பாலச்சந்தர், கலர் வண்ணத்தில் இயக்கிய முதல் படம் நான்கு சுவர்கள். ரவிச்சந்திரன் மற்றும் ஜெய்சங்கர் நடித்து,1971ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் தோல்வியடைந்தது.இதற்குப் பின்னர், மீண்டும் கருப்பு வெள்ளைக்கே திரும்பி விட்ட பாலச்சந்தர், இயக்கிய அடுத்த கலர்  வண்ணப்படம் முற்றிலும் புதுமுகங்களையே கொண்டிருந்த பட்டினப் பிரவேசம் மற்றும் அதை அடுத்து கமலஹாசன் கதாநாயகனாக நடித்த மன்மத லீலை.பாலச்சந்தர் இயக்கிய கடைசி கருப்பு வெள்ளைத் திரைப்படம் நிழல் நிஜமாகிறது.
  • k balachandhar film
  • துவக்க காலத்தில் நாடகபாணித் திரைப்படங்களை (மேஜர் சந்திரகாந்த், நீர்க்குமிழி, தாமரை நெஞ்சம்) இயக்கிய பாலச்சந்தர், நகைச்சுவையில் தமது முத்திரையைப் பதிக்க  தொடங்கினார்.அனுபவி ராஜா அனுபவி, பூவா தலையா, பாமா விஜயம் போன்றவை. மேலும்,பாலச்சந்தர் இயக்கிய தில்லு முல்லு திரைப்படம் மெகா ஹிட்டானது.
  • நான்கு சுவர்கள் படுதோல்வி அடைந்து, விமர்சன அளவிலும் ஒதுக்கப்பட்டது.இருந்தபோதிலும்,அதே ஆண்டு வெளியான நூற்றுக்கு நூறு திரைப்படம் பெரும் பாராட்டையும் வெற்றியையும் ஈட்டியது.
  • kb-movie
  • அரசியல் களத்தைத் தொட்டுப் பார்த்த பாலச்சந்தரின் படங்கள் தண்ணீர் தண்ணீர் (இது கோமல் சுவாமிநாதனின் அதே பெயரைக் கொண்ட நாடகத்திலிருந்து உருவானது; திரைப்படத்தின் வசனத்திற்கும் கோமல் பங்களித்திருந்தார்), மற்றும்  அச்சமில்லை அச்சமில்லை போன்றவை.
  • thanneer thanneer
  • நூறு படங்களுக்கும் மேலாக இயக்குனராகப் பணியாற்றியிருப்பினும், எம்.ஜி.ஆரை, பாலச்சந்தர் இயக்கியதே இல்லை. அவரது ஒரே ஒரு படத்திற்கு மட்டும் வசனம் எழுதியுள்ளார். தெய்வத்தாய் என்னும் அத்திரைப்படம்,ஆர்.எம்.வீரப்பன் தயாரிப்பில் பி.மாதவன் இயக்கத்தில் வெளிவந்து  வெற்றியடைந்தது.பி.மாதவன்,எம்.ஜி.ஆரை வைத்து இயக்கிய ஒரே படம் இதுவே,என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • mgr-with-k-balachandhar
  • பாலச்சந்தரின் இயக்கத்தில்,சிந்து பைரவி படத்தில், தமது பாத்திரத்திற்காக சுஹாசினி, இந்திய அளவில் சிறந்த நடிகை விருது பெற்றார். இளையராஜாவிற்கும் சிறந்த இசையமைப்பாளர் விருதினை ஈட்டித் தந்த படம் இது.
  • sindhu-bhairavi
  • சிரஞ்சீவியின் நடிப்பில்,தெலுங்கில் பாலச்சந்தர் இயக்கிய ருத்ரவீணா வெற்றி பெறவில்லை. எனினும்,கமலஹாசன் நடிப்பில் உன்னால் முடியும் தம்பி என்னும் பெயரில் வெளியான அதன் தமிழாக்கம் வெற்றியும், பாராட்டுகளும் பெற்றது.
  • unnaal mudium thambi
  • கமலஹாசனும், ரஜினிகாந்தும் இணைந்து நடித்த கடைசிப் படம் பாலச்சந்தரின் நினைத்தாலே இனிக்கும்.ஆயினும், இது எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. பாலசந்தர் வெளிநாடுகளில் படப்பிடிப்பை நிகழ்த்திய முதல் படமும் இதுவேயாகும்.
  • nenaiththaalae-inikkum
  • பாலச்சந்தரின் இயக்கத்தில், ஜெயலலிதா நடித்த ஒரே படம் ‘மேஜர் சந்திரகாந்த்’.
  • major-chandrakanth
  • ஜெமினி கணேசனின் சொந்தத் தயாரிப்பில், பாலச்சந்தர் இயக்கிய நான் அவனில்லை, அதன் புதுமையான கையாளுமைக்காகப் பெரிதும் பாராட்டுகளை பெற்றிருந்தாலும், வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆயினும், இதற்காக ஜெமினி கணேசன், ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார்.
  • naan-avan-illai
  • பாலச்சந்தரின் வெற்றிப்படங்களில் ஒன்றான நூற்றுக்கு நூறு, தற்போது மறுவாக்கத்தில் உள்ளது.
  • k-balachandhar-films
  • அப்பப்பா……இத்தனை சாதனையா! “கே.பி.சார் நீங்க தான் இது எல்லாம் பண்ணது” என்று யாராவது அவரிடம் சொல்லவேண்டும்.அத்தகைய எளிமை.இரு கைகளையும் கூப்பி அஞ்சலி செலுத்துவோம்…
Top