சுதந்திரத்திற்கான உரிமை Article 21. சுதந்திரத்திற்கான உரிமை என்பது நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் வழங்கப்படும் ஒரு அடிப்படை உரிமை. இந்திய அரசியலமைப்பில், அரசியல் அறிஞர்களால் உத்திரவாதம் அளிக்கப்பட்ட உரிமை சட்டங்கள் 19,20, 21A, மற்றும் 22 ஆகிய பிரிவுகள் உள்ளது. ARTICLE 21 மற்றும் 21A பற்றிய சிறு தொகுப்பினை காண்போம்.
ARTICLE 21 | பிரிவு 21 : உயிருக்கும், தனிப்பட்ட சுதந்திரத்திற்கும் பாதுகதப்பு [Protection Of Life And Personal Liberty]
எந்த ஒரு நபரும் சட்டத்தில் இயற்றப்பட்டிருக்கும் வழிமுறைகளை தவிர தன்னுடைய உயிரையும், தனிப்பட்ட சுதந்திரத்தையும் இழக்க நேரிட கூடாது. இந்த சட்டம் இந்திய குடிமகன் மற்றும் மற்றவருக்கும் பொருந்தும்.
ARTICLE 21A | பிரிவு 21A : ஆரம்ப கல்வி கற்பதற்கான உரிமை [Right To Elementary School]
இந்த சட்டத்தின் படி மாநில அரசுகள் 6 வயதில் இருந்து 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாய கல்வி வழங்க முடியும்.