ARNAB GOSWAMI கைது. ரிபப்லிக் டிவி எடிட்டர் அர்னாப் கோஸ்வாமியை இன்று காலை மும்பை நகர் போலீசார் கைது செய்தனர். இன்று காலை அவரது வீட்டிற்கே சென்று கைது செய்துள்ளது போலீஸ். ARNAB GOSWAMI, இவர் பிரபல பத்திரிக்கையாளர் ஆவார்.

இந்நிலையில், அவரை கைது செய்த போது போலீசார் தன்னை தாக்கியதாக கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல், அவரது குடும்பத்தினரையும் தாக்கியதாக கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கு, ஆளுங்கட்சியாக பா.ஜ.க தரப்பில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. கட்டிட உள் வடிவமைப்பாளரான [Architecture] ஒருவர் 2018 -ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு அர்னாப் தான் காரணம் என்று அவரின் மகள் அளித்த புகாருக்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, போலீசார் அவரது வீட்டிற்கே சென்று வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர். விசாரணைக்காக அழைத்து சென்றபோது வேனில் ஏறும்போது தள்ளியதாக கூறியுள்ளார் அர்னாப். கடந்த, 2018 -ஆம் ஆண்டு கட்டிட உள் வடிவமைப்பாளர் அன்வய் நாயக் தற்கொலை செய்து கொண்டார். தனது தந்தையும், பாட்டியும் தற்கொலை செய்துகொண்டதற்கு காரணம் அர்னாப் தான் என்று புகார் அளித்துள்ளார் அவரது மகள் அதன்யா நாயக். இந்த வழக்குக்காக அவரை தற்போது கைது செய்துள்ளனர். அவரை 14 நாட்கள் காவலில் வைக்க மும்பை போலீஸ் அனுமதி கோரியுள்ளது.
இதுமட்டுமின்றி, நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் மகாராஷ்டிரா மாநில ஆளுங்கட்சி சிவசேனாவுக்கு எதிராக சில செய்திகளை வெளியிட்டார். இந்த செயல் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. TRP ரேட்டிங்கிற்காக முறைகேடாக நடந்ததாக கூறி அர்னாப் மீது வழக்கு தொடரப்பட்டது.
இவை அனைத்தும் ஊடக சுதந்திரம் என்று மத்திய அமைச்சர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அர்னாப் கோஸ்வாமிக்கு பா.ஜ.க அரசு ஆதரவளித்து வருகிறது.