Main Menu

What’s New?

Connect With Us

அதி நவீன அக்விலியன் ஒன் 640-ஸ்லைஸ் சி.டி.ஸ்கேனர் அப்பல்லோ அறிமுகம்!

Read Carefully

SHARES

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்,இந்தியாவின் முதல் அதிநவீன “அக்விலியன் ஒன் ப்ரீஸம் 640-ஸ்லைஸ் சி.டி.ஸ்கேனரை தனது மருத்துவமனையில் அறிமுகப்படுத்தியுள்ளது.இது நோயாளிகளின் உடலை ஆக்கிரமிப்பு இல்லாத வாறு இதய மதிப்பீட்டில் புதிய முன்னுதாரங்களை அமைத்துக் கொடுக்கிறது.640-ஸ்லைஸ் சி.டி.ஸ்கேனரை தமிழக அரசின் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு,மருத்துவ கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜய பாஸ்கர் தொடங்கி வைத்தார்.அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி,துணைத்தலைவர் பிரீதா ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த 640-ஸ்லைஸ் சி.டி.ஸ்கேனர் அடுத்த தலைமுறையினரின் மருத்துவ தொழில்நுட்பத்தின் புதிய அம்சமாக கருதப்படுகிறது.இந்த ஸ்கேனர் மூலம் மிக துல்லியமாக நோய் கண்டறியும் சக்தியைக் கொண்டது.

apollo

சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.விஜய பாஸ்கர் பேசுகையில்,இங்குள்ள நோயாளிகளின் நலனுக்காக அப்பல்லோ மருத்துவமனை,தமிழ்நாட்டிற்கு பல சிறந்த மருத்துவ தொழில்நுட்பத்தை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது.இந்த 640-ஸ்லைஸ் சி.டி.ஸ்கேனரை அறிமுகப் படுத்தியதற்கு வாழ்த்துகள்.இது தமிழ்நாட்டில் உள்ள நோயாளிகளுக்கு மட்டுமல்லாது,இந்தியா முழுவதிலும் உள்ள நோயாளிகளுக்கும் பயனளிக்கும் என்பதில் உறுதியாக உள்ளேன்.என்றார்.

apollo

அப்பல்லோ மருத்துவமனை நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி கூறுகையில்,”புதிய 640-ஸ்லைஸ் சி.டி.ஸ்கேனர்”,எங்களின் தன்னிறைவு இந்தியாவாக மாற்றுவதற்கான முயற்சி.வெளிநாடுகளில் வழங்கப்படும் இத்தகைய சிகிச்சைகளை அதே உலகத்தரம் வாய்ந்த,இந்தியாவில் மிக குறைந்த செலவில் அப்பல்லோ வழங்கப்படுகிறது.இந்தியாவில் 4 இறப்புகளில் ஒன்று இஸ்கிமிக் எனப்படும் ரத்த ஓட்டத்தை தடுத்து,பக்கவாதத்தையும் ஏற்ப் படுத்திகிறது.இத்தகைய நோயை ஆரம்ப காலத்திலே கண்டறிவது அவசியம்.640-ஸ்லைஸ் சி.டி.ஸ்கேனர் தொழில் நுட்பம் இது போன்ற நோயினை மிக விரைவாக,துல்லியமாக ஸ்கேன் எடுத்து காட்டிவிடும்.முழு இதயத்தை ஒரு நொடியில் படமாக்கிவிடும்.இது பயன்படுத்த மிகவும் எளிதானது மற்றும் முழு இதயத்தையும் ஒரே சுழற்சியில் உள்ளடக்கி படம் எடுக்கிறது.16 சென்டி மீட்டருக்குள் இருக்கும் மூளை,சிறுநீரகங்கள்,போன்ற உறுப்புகளையும் ஸ்கேன் செய்ய பயன்படுகிறது.

apollo

துணைத் தலைவர் பிரீதா ரெட்டி பேசுகையில்,நாளுக்கு நாள் நோய்கள் அதிகரித்து வரும் சூழலில் 640-ஸ்லைஸ் சி.டி.ஸ்கேனரை போல அதி நவீன தொழில் நுட்பம் நமக்கு மிகுந்த அவசியமான ஒன்று.அது எம் மருத்துவமனை அறிமுக படுத்தியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.இந்த ஸ்கேனர்,99 சதவீதம் துல்லியத்துடன் இதய நோயை கண்டறிந்து விடும்.இதனால் நோயின் தன்மையை மிக விரைவாக கண்டறிந்து அவர்களுக்கு ஆஞ்சியோகிராம்,ஸ்டென்ட்,அல்லது அறுவை சிகிச்சை,போன்ற அடுத்தக் கட்ட சிகிச்சைக்கு மிக விரைவாக அளிக்கப் படுவர்.

apollo

நிர்வாக இயக்குனர் சுனிதா ரெட்டி கூறுகையில்,நாங்கள் எப்போதும் இது போல மேம்பட்ட தொழில் நுட்பங்களை அறிமுகம் படுத்துவதில் பெருமைக் கொள்கிறோம்.இந்த சிடி ஸ்கேன் எங்கள் நவீன அணுகுமுறையின் மற்றொரு எடுத்துக்காட்டாகும்.315 கிலோ உடல் எடை வரை கொண்ட பருமனான நோயாளிகளுக்கும் இடமளிக்கும்.மிக அதிக எடை கொண்டவர்களுக்கு வழக்கமாகா எடுக்கப்படும் ஸ்கேனர் பொருந்தாது.ஆனால் இது பொருந்தும்.இவ்வாறு கூறினார்.

Top