Main Menu

What’s New?

Connect With Us

அரிய வகை குறைபாடு கொண்ட இரண்டு குழந்தைகளுக்கு சிகிச்சையை செய்து சாதனை படைத்துள்ளது அப்பல்லோ மருத்துவமனை

Read Carefully

SHARES

அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் ஆறு மாத குழந்தை மற்றும் பதினொரு வயது சிறுமிக்கு சிக்கலான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை இந்தப் பெருந்தொற்று நோய்க் காலத்தில் வெற்றிகரமாக மேற்கொண்டு இரண்டு இளம் உயிர்களைக் காப்பாற்றி சாதனை படைத்து உள்ளனர். உயிருடன் உள்ள கல்லீரல் கொடையாளர்களிடம் இருந்து இந்த கொடை பெறப்பட்ட சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இரு குழந்தைகளின் தாய்மார்கள் தங்கள் கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்ததன் மூலம் அந்தக் குழந்தைகளுக்கு மீண்டும் ஒரு புதிய வாழ்க்கையை வழங்கினர்.ஆறு மாத குழந்தையான அபியன்ஷ் மொண்டால் 2020 ஜனவரியில் பிறந்தது. அப்போதிலிருந்து தொடர்ந்து அந்தக் குழந்தைக்கு மஞ்சள் காமாலை இருந்தது, இது காலப்போக்கில் மோசமானது, குழந்தை ஒரு அரிய மரபணு கோளாறால் பாதிக்கப்பட்டது, அதன் காரணமாக அவர் பித்தநீர் குழாய் இல்லாமல் பிறந்தது. ஜார்கண்டைச் சேர்ந்த அபிஷேக் மொண்டல் மற்றும் சம்யுக்த குமாரி ஆகியோரின் மகனான அபியன்ஷ் மொண்டால் என்ற அந்தக் குழந்தை, பிலியரி அட்ரேசியா என்ற அரிய, பிறவி கல்லீரல் கோளாறால் அவதிப்பட்டு வந்தது. ஜனவரி மாதம் ஜார்க்கண்டில் அந்தக் குழந்தைக்கு இந்த நோய் கண்டறியப்பட்டாலும், தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் அந்தக் குடும்பத்தினரால் மேல் சிகிச்சை செய்ய முடியவில்லை.

அதன் பின்னர் சென்னை அப்பல்லோவில் அந்தக் குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட இந்த சிகிச்சை முறை குறித்து கருத்துத் தெரிவித்த அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர், இரைப்பை குடல் இயல் (காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட்) நிபுணர் டாக்டர் இளங்குமரன், “அந்தக் குழந்தையின் பெற்றோர் குழந்தையை சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அவர்கள் அழைத்து வந்த நேரத்தில் குழந்தையின் கல்லீரல் முற்றிலும் சேதமடைந்திருந்தது. குழந்தையின் எடை எட்டு கிலோகிராம் மட்டுமே இருந்தது. அக்குழந்தைக்கு பித்த நாளம் உருவாகவே இல்லை. இது பொதுவானது அல்ல, அசாதாரணமானது. எல்லா சிக்கல்களையும் அவசரநிலையையும் ஆராயந்த பின்னர், குழந்தையைக் காப்பாற்ற ஒரே வழி மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தோம். குழந்தை அபியன்ஷ்-க்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. உயிருடன் உள்ள ஒரு கல்லீரல் நன்கொடையாளர் அதாவது அவரது தாயார் சன்யுதா குமாரி தானம் கொடுத்ததை அடுத்து அந்தக் குழந்தை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அந்தக் குழந்தை முழுமையாக குணமடைந்து பெற்றோருடன் ஜார்க்கண்ட் திரும்பியது.” என்றார்.

குழந்தைகளுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வது நாடு முழுவதும் மிகச் சில மருத்துவமனைகளில் மட்டுமே செய்யக் கூடிய சிக்கலான அறுவை சிகிச்சை ஆகும். அறுவை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பராமரிப்பு ஆகிய இரண்டிலும் மிகச் சிறந்த நிபுணத்துவம் மற்றும் மிக அதிக அனுபவம் தேவை. செலவு செய்ய முடியாத பெற்றோருக்கு ஆதரவு அளித்து அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய உதவும் வகையில் பல நிதி நிறுவனங்கள் பலரிடம் பணம் பெற்று கூட்டு நிதி உதவி வழங்குவதுடன் அரசும் பங்களிப்பை வழங்குகிறது. கல்லீரல் மருத்துவ சிகிச்சை, பிளாஸ்மாபெரிசிஸ் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிக்கலான கல்லீரல் சிகிச்சைகள் தேவைப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப் போதுமான அளவு வசதிகளுடன் கூடிய மிகச் சிறந்த குழந்தைகளில் மருத்துவமனைகளில் அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையும் ஒன்றாகும்.

Top