அந்நியன் பட ரீமேக் வழக்கு : இயக்குனர் ஷங்கருக்கு தயாரிப்பாளர் நோட்டீஸ்.

anniyan hindi remake shankar - ranveer singh

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என அழைக்கப்படுபவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் 2005 -ஆம் ஆண்டு வெளியான படம் “அந்நியன்”. சியான் விக்ரம், சதா, விவேக், நாசர் போன்ற பலர் நடித்திருந்தனர். ஆஸ்கர் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயாரித்திருந்தார். விக்ரமின் தனிப்பட்ட நடிப்பினால் இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. விக்ரமின் அம்பி, ரெமோ, அந்நியன் என 3 கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. குறிப்பாக விக்ரமிற்கு உலகம் முழுவதும் ரசிகர்ளை உருவாக்கியது. ஷங்கரின் கதையம், சுஜாதாவின் திரைக்கதையும் படத்திற்கு மேலும் மெருகேற்றியது.

anniyan hindi remake

இந்நிலையில், இப்படத்தை ஷங்கர் ஹிந்தியில் ரீமேக் செய்வதாக அறிவித்திருந்தார். அதில், நடிகர் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். அதற்கான முன் தயாரிப்பு (Pre-Production) பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், ஏற்கனவே கமல் நடிப்பில் உருவாகி வரும் “இந்தியன் 2” படத்தை கிடப்பில் போட்டுவிட்டு இப்படத்தின் பணிகளில் இறங்கியுள்ளார் ஷங்கர். அதன் படப்பிடிப்பு 70-80% முடிவடைந்துவிட்டன. படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற விபத்து,  கொரோனா பரவல் என படப்பிடிப்பு தாமதமானது.

பின்பு இந்தியன் 2 படப்பிடிப்பை கிடப்பில் போட்டுவிட்டு தனது அடுத்த படத்தின் பணிகளை தொடங்கிவிட்டார். தெலுங்கு நடிகர் ராம் சரண் அவர்களை வைத்து புதிய படம் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியது. பிறகு பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை வைத்து அந்நியன் படத்தை ரீமேக் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியது. அதன்படி அதிகாரபூர்வ தகவலை இயக்குனர் ஷங்கர் தனது சமூகவலைதளப்பாக்கத்தில் வெளியிட்டார். அதன்பிறகு, அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன், ஷங்கருக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

anniyan remake

அதில், அந்நியன் கதையை எழுத்தாளர் சுஜாதாவிடம் இருந்து உரிய தொகை கொடுத்து வாங்கியிருப்பதாக கூறியிருந்தார். மேலும், அந்த கதை தனக்கு சொந்தமான கதை என்றும் தனது விருப்பமின்றி எவ்வாறு அவர் ரீமேக் செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அந்நியன் படத்தின் கதை உரிமை என்னிடம் தான் உள்ளது என்று வி.ரவிச்சந்திரன் கூறியுள்ளார். மேலும், அந்நியனுக்கு முந்தைய படமான “பாய்ஸ்” படம் தோல்வியடைந்தது. ஆனாலும், நான் அவருக்கு வாய்ப்பை கொடுத்தேன் என கூறியுள்ளார். ஹிந்தியில் ரீமேக் செய்ய இருக்கும் அந்நியன் பட வேலைகளை உடனே கைவிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

anniyan movie shooting stillsanniyan

 

 

 

 

 

 

 

இந்த நோட்டீசை பார்த்துவிட்டு ஷங்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் தெரிவித்துள்ளார். அதில் ஷங்கர் கூறியிருப்பதாவது, அந்நியன் படத்தின் கதை என்னுடையது. அதற்க்கு ஆஸ்கர் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் உரிமை கொண்டாட முடியாது என கூறியுள்ளார்.

முன்னதாக இந்தியன் 2 பட வேலைகள் கிடப்பில் போடப்பட்டதால் அதன் தயாரிப்பு நிறுவனம் ஷங்கர் மீது வழக்கு தொடுத்தது. இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் அடுத்த படத்தின் வேளைகளில் ஷங்கர் ஈடுபடக்கூடாது என வழக்கு தொடுத்தது. அதில், ஷங்கர் வேறு படங்களை  இயக்கலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் அடுத்த பட வேலைகளை மேற்கொண்டார் ஷங்கர். ஆனால் அதுவும் தற்போது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியன் 2 -ஆ அல்லது அந்நியன் ரீமேக்கா என பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

 

மேலும் படிக்க: 

 

இவர்தான் தளபதி 65 -ன் வில்லனா? வெளியான சூப்பர் தகவல்.

 

 

 

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top