Main Menu

What’s New?

Connect With Us

அழகுக்கு டிப்ஸ் கொடுக்கும் ஆண்ட்ரியா!

Read Carefully

SHARES

பாடகியும்,நடிகையுமான,ஆண்ட்ரியா “அழகின் ரகசியம்” என்ற தலைப்பில் நான்கு பேஸ் பேக்குகளை பற்றி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.அவர் கூறியது அப்படியே…..

 

ஆரஞ்ச் பேக்:

ஆரஞ்ச் பழத்தோலை காய வைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.அதனுடன் சிறுது தயிர்,சில துளிகள் தேன் கலந்து முகத்தில் பூசி காய விடவும்.

பப்பாளி பேக்:

பப்பாளி பழத்துண்டுகளை ஒரு கிண்ணத்தில் போட்டு அதனுடன் தேன் சிறுது கலந்து முகம் மற்றும் கழுத்துப்பகுதில் தடவிக்கொள்ளவும்.20 நிமிடங்கள் கழித்து ஜில் தண்ணீரால் முகத்தை கழுவவும்.
எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள்,பரு இருப்பவர்கள் மேற்சொன்ன பப்பாளி பழக்கலவையோடு,ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு,ஒரு ஸ்பூன் முல்தானிமெட்டி சேர்த்து கலந்து போட்டுக் கொள்ளலாம்.

வாழைப்பழ பேக்:

வாழைப்பழத்தை நன்றாக பிசைந்து,அதனுடன் கால் கப் தயிர்,2 டேபுள் ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி 10-15 நிமிடங்கள் கழித்து கழுவவும்.

ஸ்ட்ரா பெர்ரி பேக்:

8-9 ஸ்ட்ரா பெர்ரி, 2 டேபுள் ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி 25-30 நிமிடங்கள் கழித்து தண்ணீர் ஊற்றிக்கழுவவும்.சென்சிடிவ் ஸ்கின் இருப்பவர்கள் இந்த பேக்கை பயன்படுத்த வேண்டாம்.
இந்த பேஸ் பேக்குகளை தொடர்ந்து போட்டு வர தோல் மென்மையாகும்,முகத்தில் இருக்கும் கருப்புத்திட்டுகள்,புள்ளிகள் மறையும் என்று ஆண்ட்ரியா குறிப்பிட்டுள்ளார்.

Top