விக்ரம் படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் இவரா? கமல் கொடுத்த மாஸ் அப்டேட்.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படம் ‘விக்ரம்’. அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தில் சண்டை இயக்குநராக யார் இருக்க போகிறார் என்ற கேள்வி வந்தவண்ணம் இருந்தது. தற்போது அதற்கு பதில் கிடைத்துள்ளது. பிரபல சண்டை இயக்குனர்கள்  அன்பறிவ் சகோதரர்கள் தான் இப்படத்தில் பணியாற்றவிருக்கிறார்கள்.
இது தொடர்பான செய்தியையும், புகைப்படத்தையும் நடிகர் கமல்ஹாசன் இன்று  வெளியிட்டுள்ளார். அன்பறிவ் சகோதரர்கள் மிகக் குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற சண்டை இயக்குநர்களாக முத்திரை பதித்தவர்கள் என கூறலாம்.
2013-ம் ஆண்டு ‘இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் மூலம்  சண்டை இயக்குநராக அறிமுகம் ஆனார்கள்.
அதன் பின்பு ‘மெட்ராஸ்’, ‘மாயா’, ‘கபாலி’, ‘இருமுகன்’, ‘காஷ்மோரா’, ‘சத்ரியன்’, ‘கூட்டத்தில் ஒருத்தன்’, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ‘மெர்க்குரி’, ‘ஜூங்கா’, ‘கே.ஜி.எஃப். சேப்டர்-1’, ‘நோட்டா’, ‘துப்பாக்கி முனை’, ‘சண்டைக் கோழி-2’, ‘தடம்’, ‘கீ’, ‘தேவ்’, ‘மிஸ்டர் லோக்கல்’, ‘கைதி’, ‘ஆக்சன்’, ‘கே.ஜி.எஃப்.சேப்டர்-2’, ‘டாக்டர்’, ‘அயலான்’, ‘ராதே ஷ்யாம்’ ஆகிய புகழ் பெற்ற படங்களில் பணியாற்றியிருக்கிறார்கள்.

இதில் ‘கே.ஜி.எஃப். சேப்டர்-1’ படத்தில் இடம் பெற்ற சண்டைக் காட்சிகளுக்கு தேசிய விருதையும் இந்தச் சகோதரர்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கே.ஜி.எஃப். படத்தின் சண்டை காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்தது.

லோகேஷ் கனகராஜின் ‘கைதி’ படத்தின் சிறப்பே அந்தப் படத்தில் இருந்த சண்டை காட்சிகள்தான். தற்போது, விக்ரம் படத்தில் அவர்கள் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு பெருமகிழ்ச்சியை அளித்திருக்கிறது.
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp

Also Read

Scroll to Top