Main Menu

What’s New?

Connect With Us

AMIT SHAH இன்று சென்னை வருகை : கூட்டணி பற்றிய ஆலோசனை?

amitshah
Read Carefully

SHARES

AMIT SHAH இன்று சென்னை வருகை, கூட்டணி பற்றிய ஆலோசனை? மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். அவர் தமிழகம் வருகிறார் என்ற அறிவிப்பு வந்ததில் இருந்து தமிழக அரசியல் கட்சிகள் மிரள தொடனாகின. அடுத்த வருடம் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பற்றிய ஆலோசனை கூட்டத்தில் பங்குபெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பாஜக எப்படியாவது தமிழக அரசியலில் பெரும்பங்கு வகிக்க வேண்டுமென்ற முனைப்புடன் உள்ளது. 

amit shah

இந்நிலையில், 2 நாள் சுற்று பயணமாக அமித் ஷா அவர்கள் சென்னை வர உள்ளார்.  அவர் வருகையை ஒட்டி பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று மதியம் 1 : 40 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னை வந்தடைய உள்ளார். அதிமுக மற்றும் மற்ற கட்சிகள் வரவேற்க தயாராக இருப்பர். பின்பு,விமான நிலையத்தில் இருந்து லீலா பேலசுக்கு செல்ல இருக்கிறார். அமித் ஷா செல்லுமிடமெல்லாம் பாஜக கொடிகள், வாழைமரங்கள் கட்டப்பட்டுள்ளன. 

அங்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு, தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். அந்த நிகழ்ச்சியில் 67 ஆயிரத்து 378 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இடுமட்டுமில்லாமல், விமானநிலையத்தில் அவருக்காக பேனர்கள், கட் அவுட்கள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டுள்ளன.

அமித் ஷாவின் வருகை பல அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் சில பேருக்கு பயத்தை உண்டாக்கும் எனவும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தார். மத்திய உள்துறை அமைச்சரை வரவேற்க தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், எச். ராஜா போன்றோர் கலந்துகொள்ள இருக்கின்றனர். அவர், என்னனென்ன மாற்றங்களை ஏற்படுத்த போகிறார் கட்சி கூட்டணிகள் பற்றிய அறிவிப்பு ஏதேனும் வருமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

அமித் ஷாவின் பயணத் திட்டம்  :

1. சென்னை விமான நிலையம் பகல் 1.40 மணியளவில் வருகை.  

2. விமான நிலையம் முதல் ராஜபவன் வரை அதிமுக, பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு. 

3. விமான நிலையத்தில் இருந்து ஹோட்டல் லீலா பேலஸ் செல்கிறார். 

4. லீலா பேலஸில் மதிய உணவு. 

5. பல்வேறு முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார்.

6. கலைவாணர் அரங்கில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பு.

7. முதலமைச்சர், துணை முதல்வர், முக்கிய அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை.

8. லீலா பேலஸில் கட்சி நிர்வாகிகளுடன் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

9. முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார். 

10. லீலா பேலஸில் இருந்து புறப்பட்டு விமான நிலையம் புறப்பட்டு செல்கிறார். 

 

Read Also : PRABHU DEVA ரகசிய திருமணம் : PHYSIOTHERAPY டாக்டரை மணந்தார்.

Follow us on Facebook and Instagram:

Top