அஜயன் பாலா தமிழ் சினிமாவில் கடந்த பதினைந்து வருடங்களாக இருபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு கதை வசனகர்த்தாவாக பணி புரிந்து வருகிறார். அஜயன் பாலா அவர்கள் தமிழில் “சென்னையில் ஒரு நாள்”, “மனிதன்”, “தியா”, “லக்ஷ்மி” போன்ற படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்.

அஜயன் பாலா “ஆறு அத்தியாயம்” படம் மூலம் இயக்குனராக அவதாரம் கொண்டார்.
இவர் சினிமா இலக்கியம் மற்றும் வாழ்க்கை வரலாறு என முப்பதுக்கும் மேலான நூல்களை எழுதியிருக்கிறார்.
சமீபத்தில் வெளியான இவரது தமிழ் சினிமா வரலாறு நூல் திரையுலகில் பாரதிராஜா, சிவக்குமார், பாக்யராஜ் , உள்ளிட்ட பலரது பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது
இது மட்டுமல்லாமல் மறைந்த இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களின் நினைவாக சினிமாவில் வளரும் உதவி இயக்குனர்கள் பயன் பெறும் வகையில் 5000க்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் நூலகம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
தனது வாசகர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க நூலக வளர்ச்சிக்காக தன் எழுத்துக்களை பலரும் பயன்பெறும் வகையில் காணொளி வலைதளம் (YOU TUBE CHANNEL) ஒன்றையும் துவக்கியிருக்கிறார்.
பத்து வருடங்களுக்கு முன் ஒரு வார இதழுக்கு எழுதிய வாழ்க்கை வரலாற்று தொடரான “ நாயகன் “ ( NAYAGAN) என்ற பெயரையே சூட்டியுள்ளர் .
வரும் அக்டோபர் 16 முதல் இயங்கவிருக்கும் காணொளி வலைதளத்தில் மகத்தான தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை தினமும் விவரிக்க இருக்கிறார்.
இந்த, இவரது புதிய முயற்சிக்கு திரையுலகம் மற்றும் இலக்கிய உலகில் மிகுந்த வரவேற்பும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
Nayagan Title Promo :
இதற்கு நடிகர் சிவக்குமார், நடிகர் சத்யராஜ் மற்றும் எழுத்தாளர் எஸ் வி ராஜதுரை, ஆகியோர் இந்த நாயகன் காணோளி தளத்துக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
Also Read: VIJAYSETHUPATHI “800” படத்தில் நடிக்க எதிர்ப்பு : பாரதிராஜா கடிதம்.
Follow us on Facebook and Instagram: