அரசு பேருந்துகளில் போஸ்டர் ஒட்டும் அதிமுக|அதிகாரம் துஷ்பிரயோகம்!

aiadmk-poster-in-mtc-buses-cover

பஸ்களில் போஸ்டர் ஒட்டும் அதிமுக|அதிகாரம் துஷ்பிரயோகம்!

aiadmk-flag

 

கடந்த 24ம் தேதி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், பிறந்த தினம். இதை முன்னிட்டு, சென்னை உட்பட தமிழகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டது. இதில், சென்னை மாநகரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. காலை முதலேயே கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மவுண்ட் ரோடு, மயிலாப்பூர், பீச் ரோடு, திருவில்லிக்கேணி போன்ற இடங்களில் கடும் போக்குவரத்து நெருசல்கள் ஏற்பட்டன. கூட்டம் கூட்டமாக ஆட்களை வேனில் அடைந்து, மெரீனாவிற்கு அழைத்து செல்லப்பட்டன.

Chennai-traffic

வழிநெடுக்க அதிமுக கொடிகளும், சில இடங்களில் பேனர்களும் அமைக்கப்பட்டிருந்தன. ‘எதற்காக இத்தனை ஆடம்பரம்’ என இதனை பார்த்த மக்களின் மனதில் தோன்றியது. ‘யோவ்…விடுங்கய்யா…ஆபீஸுக்கு நேரமாச்சு மனேஜர் திட்டுவான்’ என்று ட்ராபிக்கில் நின்ற பலரின் கூக்குரலாக கேட்டன. ஆங்காங்கே,’ஒய்…ஒய்…’ என்ற ஆம்புலன்சின் சத்தம் நம் காதுகளை குடைந்தது. பாவம், ஆம்புலன்ஸ் உள்ளே இருக்கும் நோயாளியின் கதறலை, வெளியில் கேட்காமல், இருக்கத்தான் என்னவோ…ஆம்புலன்சின் சைரன் சத்தம்….

 reason-behind-108-number-for-ambulan

தற்போது, அதிகாரத்தின் உச்ச பச்சமாக சென்னை மாநகர பேருந்துகளில், மறைந்த ஜெயலலிதாவின் பிறந்த தினத்தை கொண்டாடும் விதத்தில், “போஸ்டர்” ஒட்டப்பட்டிருந்தன. மக்களின் சேவைக்காக தொடங்கப்பட்டதுதான் சென்னை மாநகர பேருந்து. மக்களின் வரிப்பணத்தில், வாங்கியதுதான் சென்னை மாநகர பேருந்துகள். தவிர, மாநகர பேருந்துகள் ஒன்றும், அதிமுகவினரின் சொத்துக்கள் அல்ல. இதில் எப்படி போஸ்ட்டரை ஒட்டலாம். இத்தகைய, போஸ்டர்களை சுவற்றில் ஒட்டுவதால் தான் இதற்கு தமிழில் சுவரொட்டி என்று பெயர் பெற்றது. ஆக, ஒரு போஸ்ட்டரை சுவரொட்டியில்தான் ஓட்டவேண்டும் என்பது கூடவா தெரியாது?

aiadmk-atrocity

தற்போது சுவரொட்டியில் ஒட்டுவதே தவறு. இவர்கள், பேருந்தில் ஒட்டியுள்ளனர். ஆளுங்கட்சியினர், பேருந்துகளில் போஸ்டர்களை ஒட்டும் போது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஏன் தடுக்கவில்லை? இல்லை தடுக்க முடியவில்லையா? பயமா? சரி…ஒட்டிய பின்னராவது போஸ்ட்டரை எடுத்து விடலாமல்லவா? எடுக்கவில்லை என்றால், ‘யாரும் நம்மை ஒன்றும் செய்து விட முடியாது’, என்கின்ற தைரியமா? இவைகள்யெல்லாம் இல்லை, அதிகார துஷ்பிரயோகம்..! இதற்கு மேல் நடவடிக்கை எடுத்தால் என்ன… எடுக்கவில்லை என்றால் என்ன… அதிகாரிகளும் மாறப்போவதில்லை, ஆட்சியாளர்களும் மாறப்போவதில்லை, மக்களும் மாறப்போவதில்லை நாமும் இத்தகைய பொது பிரச்சனைகளை கையில் எடுத்து தொடர்ந்து மாறாமல் எழுதிக்கொண்டே இருப்போம்.

aiadmk-poster-in-buses

 

 

மேலும் படிக்க: 

அன்றும் இன்றும் பச்சோந்தி கருப்பையா!

பொய்க்கு பரிசா?|என்னய்யா சொல்றீங்க?

 

Follow us on Facebook and Instagram:

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top