“பிரம்மாண்டத்திற்கு வயது 57”

“பிரம்மாண்ட இயக்குனருக்கு” இன்று 57வயதாகும்.சினிமாவில் நடிகராக வேண்டும் என்பதற்காக கும்பகோணதில் இருந்து ஷங்கர் சென்னைக்கு வந்தார்.சிறிய கதா பாத்திரத்தில் நடித்த ஷங்கர் அதன் பின்னர் சரி வர நடிக வாய்ப்புகள் இன்றி இருந்தார்.“இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணியாற்ற வாய்ப்பு வந்தது.எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக ஷங்கர் சேர்ந்து விட்டார்.சேர்த்து விட்டது நடிகர் செந்திலாகும்.

சினிமாவை பற்றி கற்றுக்கொண்டு 1993ஆம் ஆண்டு கே. டி. குஞ்சுமோன் தயாரிப்பில் “ஜென்டில்மேன்”என்கின்ற படத்தை இயக்கினார்.படம் சூப்பர் ஹிட்,அதன் பின்னர் ஷங்கர் படிப்படியாக வளர ஆரம்பித்தார்.
“கல்வியை மையமாக”வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமான “ஜென்டில்மேன்” பட்டிதொட்டி எங்கும் பேசப்பட்டது.இப்படதிற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார்.பாடல்களும் சூப்பர் ஹிட்,படத்தின் வசூல் 2 மில்லியனாகும்.இப்படத்தில் நாயகனாக அர்ஜுன் நடித்திருப்பார்.அன்றைய காலகட்டத்தில் இப்படம் அனைவரிடமும் பேசப்பட்டது.

1994ல் “காதலன்”என்கின்ற திரைப்படத்தை இயக்கினார் ஷங்கர்.இப்படத்திற்கும் கே. டி. குஞ்சுமோன் தான் தயாரிப்பாளர்.பிரபுதேவா,நக்மா,வடிவேலு,ரகுவரன்,கிரீஷ் கர்னாட்,எஸ். பி. பாலசுப்பிரமணியம்,போன்றோர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கும் ஏ. ஆர். ரகுமான்தான் இசை.பாடல்கள் அதைத்துமே ஹிட்.ஆனால்,முந்திய படம் போல “காதலன்” வெற்றியை கொடுக்கவில்லை.இருப்பிலும் விமர்சனம் ரீதியில் படம் பேசப்பட்டது.படத்தில் வரும் காமெடிகள் அனைத்துமே இன்றும் நமக்கு சிரிப்புகளை ஏற்படுத்தும்.

ஓராண்டு இடைவேளிக்கு பின் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த படம் “இந்தியன்” ஷங்கரே எதிர்பார்க்காத அளவிற்கு படம் “சூப்பர்டூப்பர்ஹிட்” கமல்,ஷங்கர் கூட்டணி முதல் முதலில் இணைந்து பணியாற்றுகிறது.ஏ. எம். ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தை ஸ்ரீ சூர்யா மூவீஸ் வெளிவிட்டது. இப்படம் 1995-ல் வெளியான “பாட்ஷா” பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. 1977 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் மற்றும் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த “நாம் பிறந்த மண்” படத்தின் அடிப்படை கதையை ஒட்டி இப்படம் அமைந்திருந்தது.“ஆஸ்காருக்கும்”இப்படம் தேர்வானது.“லஞ்சம்”சம்மந்தமாக கதை நகரும்.இப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்க வேண்டியதிர்ந்தது.இப்படம் இன்றும் அனைவரிடத்திலும் பேசப்பட்டு வருகிறது.

1998ஆம் ஆண்டு “ஜீன்ஸ்” என்கின்ற இரட்டையர் ஹீரோ கதா பாத்திர கதையை இயக்கினார்.பிரசாந்த்,ஐஸ்வர்யா ராய்,நாசர்,செந்தில் ஆகியோர் நடித்தார்கள்.இசை ரகுமானே,“பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்”என்கிற இப்படத்தில் வரும் பாடலுக்கு,உலகின் உள்ள ஏழு அதிசய இடங்களுக்கு சென்று ஷங்கர் படமாக்கி சாதனை புரிந்தார்.பல புதிய தொழில் நுட்பங்களை இப்படத்தில் பயன்ப்படுத்தினார்.படமும் வசூல் ரீதியில் மாபெரும் சாதனை படைத்தது.

1999ல் மீண்டும் ஷங்கர்,அர்ஜுன் கூட்டணி இணைந்து “முதல்வன்”என்கின்ற படத்தை எடுத்தது.படம் சூப்பர்ஹிட். தமிழில் சிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருது பெற்றது.ஒரு நாள் முதல்வராக ஹீரோ நடித்திருப்பார்.இது அன்றைய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது.ரகுமானின் இசையும்,கே.வி.ஆனந்தின் ஒளிப்பதிவும்,படத்திற்கு கூடுதல் பலமாக பார்க்கப்பட்டது.அதே போல் சுஜாதாவின் வசனமும் நெத்தி அடி.இத்திரைப்படம் 2001ல் ஹிந்தியில் “நாயக்” எனப் பெரும் செலவில் மறு தயாரிப்பு செய்யப்பட்டது.அங்கும் படம் ஹிட்.

சரியாக மூன்று ஆண்டுகள் கழித்து.அதாவது 2003ல் “பாய்ஸ்”என்கின்ற திரைப்படத்தை இயக்கினார்.யாரும் எதிர் பார்க்காத வகையில் இப்படத்திற்கு எதிர்ப்புகள் வந்தன.படத்தில் அதிகளவில் ஆபாசம் இருப்பதாக பெண்கள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கினர்.இதனால் ஷங்கர் முதல் முதலில் வேதனை அடைந்தார்.பின்னர் படம் வெளியாகின,படம் ஃபிலாப் ஆனது.ஆனால் ஏ.ஆர்.ரகுமானின் வித்தியாசமான பாடல்களால்,இப்படத்தில் வரும் அணைத்து பாடல்களையும் வெகுவாக ரசித்தார்கள்.

2005ஆம் ஆண்டு ஷங்கருக்கு மறக்கமுடியாத ஆண்டாக அமைந்தது ஆம்! ஷங்கர் இயக்கிய “அந்நியன்” திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. 579 மில்லியன் வசூல் செய்து மாபெரும் சாதனையை படைத்தது.இப்படத்தில் விக்ரமை,ஷங்கர் நடிக்கவைத்திருந்தார்.கதை களம் வித்தியாசமாக இருந்ததால் படம் ஹிட்டானது என்று பேசப்பட்டது.இது நாள் வரை தான் இயக்கிய திரைப்படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமானே இசையமைத்திருந்த நிலையில் புதிய கூட்டணியாக,ஹாரிஸ் ஜயராஜுடன் கூட்டணி அமைத்தார் ஷங்கர்.

2007ஆம் ஆண்டு ஷங்கரின் கனவு நினைவான நாள்.ரஜினிகாந்தை வைத்து ஒரு படமாவது இயக்கிவிட வேண்டும் என்பது ஷங்கரின் ஆசையாகும்.அதற்காக இந்தியன்,முதல்வன்,ஆகிய படங்களில் ரஜினியை ஹீரோவாக்க முயற்சியையும்,செய்தார் ஆனால் முடியவில்லை.“முயற்சி திருவினை யாக்கும்” ரஜினியை வைத்து “சிவாஜி”என்கின்ற படத்தை எடுத்து, தன் கனவை நினைவாக்கிக்கொண்டார் ஷங்கர்.படம்,பாடல்கள்,என அனைத்தும் சூப்பர்ஹிட்.ரஜினி ஷங்கர் கூட்டணி மாஸ் செய்தது.

உலக முழுவதிலும் எதிர்பார்த்த படம் “எந்திரன்”.ரஜினி ஷங்கர் இருவரும் மீண்டும் இணைந்தனர். 196 கோடி சன் பிக்சர்ஸ் மிக பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவானது.கிட்டத்தட்ட 293 கோடிக்கும் மேல் வசூலானது.ஷங்கர் இயக்கத்தில்,ஐஸ்வர்யாராய் இரண்டாவது முறையாக இப்படத்துக்கும் ஹீரோயினாக நடித்துள்ளார்.உலகம் முழுதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த “எந்திரன்” திரைப்படமானது, அதிக‌ வசூல் பெற்று தமிழ்த் திரைப்படங்களில் அதிக அளவு வசூல் அடைந்த திரைப்படம் என்னும் பெருமையைப் பெற்றது.இந்தியில் எதிர்பார்த்த வெற்றியைத் தராவிட்டாலும், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியிடப்பட்ட இந்தப் படமானது உலகம் முழுதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது.

தன் குருவான எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் இளைய தளபதி விஜய்யை வைத்து “நண்பன்”என்கின்ற படத்தை 2012ல் இயக்கினார்.இதில் ஜீவா.ஸ்ரீகாந்தும் நடித்துள்ளனர்.இத்திரைப்படம் “த்ரீ இடியட்ஸ்”என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் ஆகும்.இத்திரைப்படத்தின் மூலம் விஜயின் திரைப்படத்திற்கு முதன் முறையாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கின்றார்.56 கோடி ஈட்டு வசூல் படைத்தது.

100 கோடி முதலீட்டில்,239.50 கோடி வசூல் செய்த படம் “ஐ”.விக்ரம் ஷங்கர் மீண்டும் இணைந்தனர்.வித்தியாசமான உடல் அமைப்புடன் விக்ரம் தன் உயிரை பணையம் வைத்து நடித்தார்.வேணு ரவிச்சந்திரன் தயாரித்தார். இப்படம் விக்ரம் நடிக்கும் ஐம்பதாவது திரைப்படமாகும்.இப்படத்திற்கு சுபா வசனம் எழுதினார்கள்.

2018ல் மீண்டும் ரஜினிகாந்தை வைத்து ஹாட்ரிக்காக “2.0”என்கின்ற படத்தை இயக்கினார்.இது எந்திரன் படத்தின் பார்ட்-2வாக கருதப்பட்டது.இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இத்திரைப்படத்தின் முந்தைய பகுதியான எந்திரன் திரைப்படத்திற்கு இசையமைத்த ஏ. ஆர். ரகுமான் இப்படத்திற்கும் இசையமைதார்.இப்படத்தில் ஒரு பாடல் மட்டுமே போதும் எனவும், பிறகு தேவைப்பட்டால் மேலும் பாடல்களைப்பற்றி யோசிக்கலாம் என இயக்குனர் முடிவு செய்தார்.அதனால் இப்படத்திற்கு ஒரே ஒரு பாடல் மட்டுமே.இப்படத்திற்கு ஒலி வடிவமைப்பினை ரசூல் பூக்குட்டி செய்துள்ளார்.அமெரிக்காவில் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17 ஆம் நாள் 66 வது ஆண்டு கோல்டன் ரீல் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது சிறந்த ஒலி வடிவமைப்பிற்கான வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கான விருதுக்காக “2.0” பரிந்துரைக்கப்பட்டுள்ளது.அதே போல் இப்படத்தின் வசூல் 750 கோடியாகும்.

தற்போது ஷங்கர், கமலை வைத்து “இந்தியன்-2” உருவாக்கிவருகிறார்.சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தலத்தில் விபத்து நடைபெற்றதாலும்,கொரோனா காரணமாகவும்,படப்பிடிப்பு பாதியில் நிற்கிறது.“முதல்வன்”,”காதல்”,”இம்சை அரசன் 23ம் புலிகேசி”,”வெயில்”,”கல்லூரி”,”அறை எண் 305-இல் கடவுள்”,”ஈரம்”,”ரெட்டைசுழி”,போன்ற படங்களையும்,தயாரித்துள்ளார் ஷங்கர்.தன் படங்களில் ஏதேனும் ஒரு கருத்தை பதிவு செய்வார்,அது பெருமாளும் சமூக கருத்தையே ஒட்டி இருக்கும்.புதிய தொழில் நுட்பங்களை தமிழ் சினிமாவுக்கு,முதலில் அறிமுகம் படுத்திய பெருமை ஷங்கருக்கே!

இத்தகைய பிரம்மாண்ட இயக்குனருக்கு “இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை கூறிக்கொள்கிறது“Chennaiyil.Com”

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top