Main Menu

What’s New?

Connect With Us

“சபாபதியை” இயக்கிய ஏ.டி.கிருஷ்ணசாமி|யார் இவர்?

Read Carefully

SHARES

தமிழ் சினிமாவின் ஆரம்ப கால இயக்குனரின் ஒருவர் மறைந்த ஏ. டி. கிருஷ்ணசாமி.1905ல் பிறந்த கிருஷ்ணசாமி,படிக்கும் போதே நாடகங்கள் எழுதுவதிலும், நடிப்பதிலும் ஆர்வம் கொண்டார். பம்மல் சம்பந்த முதலியாரின் “சுகுண விலாச சபா” நாடகக் கம்பனியில் இணைந்து நடித்தார்.கிருஷ்ணசுவாமிக்கு,1934-ஆம் ஆண்டிலேயே ஏ.வி.மெய்யப்பனின் தொடர்புகள் ஏற்பட்டது. அவரது “சரஸ்வதி ஸ்டோர்ஸ்” என்ற இசைத்தட்டு நிறுவனம் வெளியிட்ட நாடக இசைத்தட்டுகளுக்கு வசனம் எழுதிக் கொடுத்தார்.ஏவிஎம் நிறுவனம் தயாரித்த “நந்தகுமார்” (1938) திரைப்படத்தில் டி.ஆர்.மகாலிங்கம் பாடிய ‘யுக தர்ம முறையே’ என்ற பாடலை எழுதி திரைத்துறைக்கு அறிமுகமானார்.

இதே படத்தில் லலிதா வெங்கடராமன் பின்னணி பாடிய ‘தீனதயாபரனே திவ்யனே’ என்ற பாடலையும் இயற்றினார்.அடுத்ததாக அதே ஏவிஎம் தயாரிப்பில் “சபாபதி” (1941) என்கின்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார்.கன்னடத்தில் வெளியான “சத்ய ஹரிச்சந்திரா” என்ற வெற்றிப் படத்தை இயக்கி சாதனை படைத்தார்.இது 1944-ல் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தது. தமிழ்ப் படத்திற்கு இவரே வசனங்களை எழுதினார்.தொடர்ந்து “வித்யாபதி” (1946),“மனம் ஒரு குரங்கு” ஆகிய திரைப்படங்களை இயக்கி,அந்த கால முன்னணி இயக்குனராக வளம் வந்தார். 1963ல் “அறிவாளி” என்கின்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கினார்.இப்படம்,கிருஷ்ணசுவாமிக்கு மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது.

“விஜ­ய­லட்­சுமி”(1946),“வித்யாபதி”(1946),“கங்கணம்”(1947),“மோகனசுந்தரம்”,“ராஜாம்பாள்”(1951),“குமாஸ்தா”(1953),“தூக்குத் தூக்கி”(1954),”மேனகா”(1955),“சதாரம்”(1956) போன்ற திரைப்படங்கள் ஏ. டி. கிருஷ்ணசாமி திரைக்கதை, வசனம் எழுதிய முக்கியமானவை.“சபாபதி”(1941),“மணி மாலை”(1941),“ஹரிச்சந்திரா”(1944),“ஸ்ரீ வள்ளி”(1945),“வித்யாபதி”(1946),“தேவமனோகரி”(1951),“பொன்வயல்”(1954, தயாரிப்பு, இயக்கம்),“அறிவாளி”(1963, தயாரிப்பு, இயக்கம்),“மனம் ஒரு குரங்கு”(1967),“அருட்பெருஞ்ஜோதி”(1971),போன்ற திரைப்படங்கள் ஏ.டி.கிருஷ்ணசாமி இயக்கிய முக்கியமானவை.10 படங்களை இயக்கி,9 படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதிய ஏ.டி.கிருஷ்ணசாமி,1905ல் தனது 82வது வயதில் மறைந்தார்.தற்போதுள்ள இயக்குநர்களின்,முன்னோடியாக இருக்கும் ஏ.டி.கிருஷ்ணசாமியை நினைவு கூர்கிறது,நம் Chennaiyil.Com…

Top