Main Menu

What’s New?

Connect With Us

எம்.ஜி.ஆருடன் நடித்த நடிகை|Tamil Cinema Legends

Read Carefully

SHARES

தமிழ் சினிமாவில் பழம் பெரும் சாதனை புரிந்த கலைஞர்களை அடையாளம் காட்டி வருகிறது chennaiyil அந்த வகையில்,1939ம் ஆண்டு அதாவது தமிழ் சினிமாவின் தொடக்ககாலத்தில் கதா நாயகியாக அறிமுகமானவர்,டி. ஆர்.ராஜகுமாரி.ராஜாயி என்னும் இயற்பெயரைக் கொண்ட டி. ஆர். ராஜகுமாரி, தஞ்சாவூரில் இராதாகிருஷ்ணன்-ரெங்கநாயகி தம்பதியருக்கு முதல் மகளாக மே.5 ஆம் தேதி 1922ல் பிறந்தார்.இவர் தாயார் ரெங்கநாயகி தஞ்சை குசலாம்பாள் அவர்களின் புகழ் பெற்ற இசை மேதை குடும்பத்தைச் சேர்ந்தவர். ராஜகுமாாி பிறந்த சில நாட்களிலே தகப்பனரான ராதாகிருஷ்ணன் இறந்துவிட்டார்.அதன் பிறகு,1939ம் ஆண்டு அதாவது தனது 17வது வயது முதலே “குமார குலோத்துங்கன்” என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து “மந்தாரவதி, சூர்யபுத்ரி” படங்களில் கதாநாயகியாக நடித்தார். இவையனைத்தும் படுதோல்விப் படங்களாயிருந்தும் அதைத் தொடர்ந்து கே.சுப்பிரமணியத்தின் தயாரிப்பில் வெளிவந்த “கச்ச தேவயானி” படம் பெரு வெற்றி பெற்றது.எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, எம்.கே.ராதா,டி.ஆர்.மகாலிங்கம் என அன்றைய முன்னணிக் கதாநாயகர்களுடன் நடித்துப் புகழ் பெற்றார், ராஜகுமாரி.பி.யு.சின்னப்பாவுடன் மனோன்மணி படத்திலும், பாகவதருடன் சிவகவி, ஹரிதாஸ் படங்களிலும் நடித்தார். ஹரிதாஸ் 1945 தீபாவளியன்று வெளியாகி 1946 தீபாவளி முடிய தொடர்ந்து 110 வாரங்கள் ஒரே திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது.இன்று இரண்டு நாட்கள் ஓடினாலே அது வெற்றிப்படமாக அறிவித்து விடுகின்றன.

ஜெமினியின் “சந்திரலேகா” படம் இவருக்கு பேரும், புகழும் தேடிக் கொடுத்தது.இதில் எம்.கே.ராதாவுக்கு ஜோடியாக நடித்தார்.அதில்,இவர் ஆடிய ஜிப்சி நடனம், திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் இடம்பெற்ற டிரம்ஸ் நடனம், இவருக்கு இந்திய அளவில் பாராட்டுகளைக் குவித்தது.இந்தி சந்திரலேகாவிலும் நடித்தார்.கலைஞர் மு.கருணாநிதியின் வசனத்தில் உருவான “மனோகரா” படத்தில் வசந்தசேனையாக இவர் நடித்திருந்தார்.“வானம்பாடி” படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு அக்காவாக நடித்திருந்தார். சிவாஜியுடன் “அன்பு” திரைப்படத்திலும், தனது 37ஆவது வயதில் “தங்கப்பதுமை” திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

எம்.ஜி.ஆருடன் “பணக்காரி” திரைப்படத்தில் இணையாகவும், “பெரிய இடத்துப் பெண்” திரைப்படத்தில் சகோதரியாகவும் நடித்திருந்தார்.சென்னையில் முதன் முதலாக தன்னுடைய பெயரிலேயே சொந்தமாக திரையரங்கினைக் கட்டிய முதல் நடிகை இவராவார்.திருமணம் செய்து கொள்ளாமல் தனது இளைய சகோதரர் ஆன டி.ஆர்.ராமண்ணா குடும்பத்துடன் ஆதரவாக வாழ்ந்து வந்தார் ராஜகுமாரி.33 திரைப்படங்களை நடித்த டி.ஆர்.ராஜகுமாரி, 20,செப்டம்பர் 1999ல் தனது 77வது வயதில் காலமானார்.

Top