ஆர்பி சௌத்ரி மீது விஷால் புகார் : காரணம் இதுதானா?

நடிகர் விஷால்  சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரி மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரி. சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும், இவர் நடிகர் ஜீவா, மற்றும் ஜித்தன் ரமேஷின் தந்தை ஆவார். 80, 90-களில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளது இந்நிறுவனம்.

தற்போது நடிகர் விஷால் இவர் மீது மோசடி வழக்கை பதிவு செய்துள்ளார். கடந்த 2018 -ஆம் ஆண்டு விஷால் நடித்து வெளியான படம் “இரும்புத்திரை”. P.S.மித்ரன் இயக்கத்தில் சமந்தா, அர்ஜுன் போன்றோர் நடித்திருந்தனர்.  இப்படத்தை விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி தயாரித்திருந்தது.  அப்போது, விஷால் அவர்கள் ஆர்பி சௌத்ரியிடம் சில ஆவணங்களை கொடுத்துவிட்டு லோன் வாங்கியதாக கூறப்படுகிறது.

ஆர்பி சௌத்ரி மீது புகார் கொடுத்தது சம்பந்தமாக ட்வீட் ஒன்றை போட்டுள்ளார் Vishal. அதில் “இரும்புத்திரை” படத்திற்காக செக் லீப், பத்திரங்கள் போன்ற ஆவணங்களை ஆர்பி சௌத்ரியிடம் அடமானம் வைத்துவிட்டு லோன் வாங்கினேன். பிறகு அதனை திருப்பி செலுத்தியப்பின்பு அந்த ஆவணங்களை திரும்ப கேட்டேன். ஆனால், இன்றுவரை அதனை அவர் திருப்பி தரவில்லை. என்று கூறியுள்ளார்.  அதனால், போலீசிடம் புகார் அளித்துளோம் என கூறியுள்ளார்.

இதுபற்றி ஆர்பி சௌத்ரியிடம் கேட்டபோது அந்த ஆவணங்களை அவர் சிவகுமார் என்பவரிடம் கொடுத்ததாக கூறியுள்ளார். ஆனால், அவர் சமீபத்தில் உயிரிழந்துவிட்டார். ஆகையால், அந்த ஆவணங்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளது என்பதனை தேடி வருகிறோம் என கூறியுள்ளார்.  மேலும், ஆர்பி சௌத்ரி தற்போது கொடைக்கானலில் இருப்பதாகவும், விரைவில் சென்னை வந்து இந்த பிரச்சினையை தீர்த்து வைப்பதாகவும் கூறியுள்ளார்.

 

 

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top