நடிகர் சித்தார்த் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் : பிஜேபி கட்சியினர் மீது புகார் | யோகி ஆதித்யநாத்.

siddharth got threat call from BJP members
நடிகர் சித்தார்த்துக்கு கடந்த 24 மணி நேரமாக கொலை வருவதாக புகாரளித்துள்ளார். சித்தார்த் கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வருகிறார். அவ்வப்போது சில சமூக பிரச்சனைகள், நிகழ்வுகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.  மேலும், சமூக அநீதி செயல்களுக்கும் குரல் கொடுத்து வருகிறார்.
நாட்டில் தற்போது நிலவி வரும் கொரோனா பரவலால் மாநிலங்கள் அனைத்திலும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் மருத்துவ  ஆக்ஸிஜன் உற்பத்தியை பல மடங்கு உயர்த்த உத்தரவிட்டார். அதன் பணிகள் நாடு முழுவதும் வேகமாக நடைபெற்று வருகிறது. இதுவொரு புறமிருக்க நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. ஒரு நாளைக்கு 3 லட்சத்திற்கும் மேலான கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்படுகிறது. அதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர் மத்திய, மாநில அரசுகள்.
கொரோனா பாதித்தோருக்கான ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் நிறுவனத்தை  ஆக்ஸிஜன் உற்பத்திக்காக அனுமதி அளித்தது மாநில அரசு. இதைப்போல, நாடு முழுவதும்  ஆக்ஸிஜன் உற்பத்தி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தங்களது மாநிலத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை எனவும் தட்டுப்பாடு இருப்பது போல பிம்பத்தை ஏற்படுத்துகின்றனர் என கூறியுள்ளார். அதற்கு கோலிவுட் நடிகர் சித்தார்த் “சாமானியனாக இருந்தாலும் சாமியாராக இருந்தாலும், தலைவராக இருந்தாலும் பொய் சொன்னால் அரை விழுவதை தவிர்க்க முடியாது” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
உ.பி. முதல்ர் யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறு பேசியதாக சித்தார்த் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது ஒரு புறமிருக்க தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள் 500-க்கும் மேற்பட்டோர் சித்தார்த்துக்கு போன் செய்து வசை பாடுவதாக கூறியுள்ளார். மேலும், சித்தார்த்துக்குகடந்த 24 மணி நேரத்தில் 500-க்கும் மேற்பட்ட எண்களில் இருந்து கால் வந்துள்ளதாக கூறியுள்ளார். போன் செய்து வசவு, பாலியல் துன்புறுத்தல், கொலை மிரட்டல், விடுக்கப்படுகிறது என கூறியுள்ளார். மேலும், “நான் பேசாமல் இருக்க மாட்டேன் தொடர்ந்து  முயற்சித்து பாருங்கள் என பதிவிட்டுள்ளார்.
கால் செய்தவர்கள் தமிழக BJP-யின் உறுப்பினர்கள் என்றும் அதற்கான ஆதாரம் மற்றும் எண்களை போலீசிடம் ஒப்படைக்க உள்ளதாக கூறியுள்ளார். தற்போது, நடிகர் சித்தார்த்துக்கு ஆதரவாக #istandwithsiddharth என்ற Hastag ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. ரசிகர்கள், பொதுமக்கள், சினிமா பிரபலங்கள் போன்ற பலர் சித்தார்த்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், BJP-யை வசைபாடி வருகின்றனர். ஒருபுறம் நாடே பேரழிவை சந்தித்து கொண்டிருக்கும் போது இது தேவையா என கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காவல் ஆய்வாளர் சார்பில் சித்தார்த்துக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக, தமிழக காவல் துறைக்கு நன்றி தெரிவித்துள்ளார் சித்தார்த்.

 

மேலும் படிக்க: 

 

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top