ரசிகரின் செயலால் கோபமடைந்த நடிகர் பிருத்விராஜ் : என்ன காரணம்?

மலையாள திரையுலகில் மிகப்பெரிய அந்தஸ்தை பெற்றுள்ளவர் நடிகர் பிருத்விராஜ். இவர் இதுவரை மலையாளத்தில் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் 10 படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இயக்குனர் அவதாரமும் எதுத்துள்ளார். மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலை வைத்து “லூசிபர்” படத்தை இயக்கி நடித்துமிருந்தார். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில்,  சமீபத்தில் தன்னைப்போல மிமிக்ரி செய்த ரசிகரை கண்டித்துள்ளார். 
“கிளப் ஹவுஸ்” என்ற அப்ளிகேஷன் சமீப காலமாக ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த அப்ளிகேஷனில் ஒவ்வொருவரும் தனித்தனியே ரூம் ஒன்றை கிரியேட் செய்து கொள்ளலாம். அதில் நண்பர்களை இணைத்துக்கொண்டு ஒரே குழுவாக அரட்டையடிக்கலாம். நண்பர்கள் அல்லாதவர்கள் இதனை கேட்கவோ அல்லது பார்க்கவோ முடியாது.   இந்த அப்ளிகேஷனில் தான் தற்போது நடிகர் பிரித்விராஜ் போல் மிமிக்ரி செய்துள்ளார்.
சூரஜ் என்ற நபர் நடிகர் பிருத்விராஜின் பெயரில் ஒரு போலி ஐடியை உருவாக்கியிருக்கிறார். கூடவே நண்பர்களாக பலரையும் சேர்த்திருக்கிறார். அந்தக் குழுவில் நடிகர் பிருத்விராஜே இந்தக் குழுவை ஆரம்பித்திருப்பதாக நம்ப வைத்து, அவருடைய குரலிலேயே பேசவும் செய்திருக்கிறார் சூரஜ்.
இதனை உடனேயே பிருத்விராஜின் கவனத்திற்குப் பலரும் கொண்டு சென்றதையடுத்து உடனேயே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளப் ஹவுஸ் அப்ளிகேஷனில் இருப்பது போலியான ஐடி என்று தெரிவித்து சூரஜின் பெயரையும் பகிரங்கமாக வெளியிட்டார் நடிகர் பிருத்விராஜ். இதையடுத்து உடனடியாக அந்தக் குழுவை கலைத்த சூரஜ் இதற்காக நடிகர் பிருத்விராஜிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். “நான் யாரையும் தாக்க வேண்டும் என்று சொல்லி இதனை ஆரம்பிக்கவில்லை. ஆனால் இது தவறானது. செய்யக் கூடாதது என்பதை உணர்ந்து கொண்டேன். பிருத்விராஜிடம் மன்னிப்பு கோருகிறேன்..” என்றார் சூரஜ். இதற்குப் பதிலளித்த நடிகர் பிருத்விராஜ், “டியர் சூரஜ்.. இதுவொரு பெரிய விஷயமே இல்லை. இது யாரையும் காயப்படுத்ததாக நகைச்சுவையுடன் பேசப்பட்ட விஷயம் என்பதை நானும் உணர்கிறேன்.
ரசிகருக்கு அறிவுரை :

 

ஆனால் இது ஒரு தவறான சூழலை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக் காட்டுகிறேன். கிட்டத்தட்ட 25,000 மக்கள் இந்தப் பேச்சைக் கேட்கிறார்கள். கேட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பேசுவது நான்தான் என்பதை நம்பியும் இருக்கிறார்கள். நான்தான் உண்மையில் பேசுகிறேன் என்று நினைத்து அவர்கள் இதைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் இது நிறுத்தப்பட வேண்டிய ஒன்று. இது தவறான செயல் என்று நீங்கள் ஒத்துக் கொண்டதற்கு நான் பாராட்டுகிறேன்.
மிமிக்ரி கலை என்பது ஒரு ஆச்சரியமான விஷயம். மலையாள சினிமாவில் எல்லாக் காலங்களிலும் இந்த மிமிக்ரி கலை வளர்ந்து உலக சினிமாவரையிலும் கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறது. படிப்பதை நிறுத்திக் கொள்ளாமல் மென்மேலும் கடுமையாக உழையுங்கள் சூரஜ். உங்களுக்குப் பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது..” என்று நம்பிக்கையுடன் சொல்லி வாழ்த்தியிருக்கிறார் நடிகர் பிருத்விராஜ்.

காவல்துறையில் புகார் சொல்லி.. பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தாமல் ஆரோக்கியமாக அதைத் துவக்கத்திலேயே தடுத்து நிறுத்தி அறிவுரை சொல்லியிருக்கும் நடிகர் பிருத்விராஜின் இந்தச் செயலுக்கு மிகப் பெரிய பாராட்டுக்கள் வந்தவண்ணம் உள்ளன. 

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top