நடிகர் கார்த்தி தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். அதில், வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அதன் படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் உள்ளது. இதுவொரு புறமிருக்க பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள “சுல்தான்” திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். ரஷ்மிகாவின் முதல் நேரடி தமிழ் படம் இதுவாகும். சுல்தான் படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

விஷால் நடித்த “இரும்புத்திரை”, மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் “ஹீரோ” படத்தின் மூலம் பிரபலமானவர் மித்ரன். இந்த படங்களின் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற இயக்குனர் இவர்.
மித்ரன் தற்போது கார்த்தியை வைத்து புதிய படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

திகில் நிறைந்த அதிரடி படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. முன்பாக, கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்த சிறுத்தை படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
படத்தின் இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியிடப்படும். நீண்ட நாட்களுக்கு பிறகு கார்த்தி இரட்டை வேடத்தில் நடிப்பதால் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் படிக்க:
வந்தாச்சு வலிமை அப்டேட்! : அஜித் ரசிகர்களுக்கு இரட்டை கொண்டாட்டம்.
Follow us on :
2 thoughts on “கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் இரட்டை வேடம் : மித்ரன் இயக்குகிறார்.”
Pingback: விஜய்சேதுபதியின் 46-வது படம் : பொன்ராம் இயக்குகிறார்.
Pingback: இந்தியன்-2 படப்பிடிப்பு தாமதத்திற்கு காரணமா இதுதானா ?