பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகும் விஜயின் “MASTER” : தனுஷ் மகிழ்ச்சி.

dhanush about vijay master

 தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “MASTER”. மேலும், இப்படத்தில் மாளவிகா மோகன், சந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஆண்ட்ரியா போன்ற பலர் நடித்துள்ளனர். இப்படம் இந்த வருடம் தொடக்கத்திலேயே ரிலீசுக்கு தயாராகிவிட்டது. ஆனால், கொரோனா தாக்கத்தால் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால், மாஸ்டர் உட்பட பல திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்படாமல் இருந்தன. பின்பு மாநில அரசின் தளர்வுகளுக்கு இணங்க 50% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டன. ஆனாலும், அதன்பிறகு பெரிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. 

dhanush and vijay

திரையரங்குகள் பெரிய அளவில் வருமானம் ஈட்டும் அளவிற்கு இந்த வருடம் எந்த படமும் வெளியாகவில்லை. MASTER திரைப்படம் வருகிற 2021 ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாவதாக படக்குழு அறிவித்தது. அதிலிருந்து, திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.  

நீண்ட நாட்களுக்கு பிறகு வசூலை வாரிக்குவிக்கும் படமாக MASTER இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாஸ்டர் படம் OTT -ல் வெளியாவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்த பொய்யான தகவல்களை எல்லாம் கடந்து படம் வரும் வரும் 2021 ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகிறது. இந்த தகவல் வந்ததில் இருந்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

OTTயில் வெளியிடாமல் திரையரங்கில் மட்டுமே படத்தை வெளியிட வேண்டும் என காத்துக் கொண்டிருந்த விஜய்யை பலரும் பாராட்டி வருகின்றனர். இதற்கு, பல சினிமா பிரபலங்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

dhanush about master

இந்த நிலையில் நடிகர் தனுஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ம் தேதி வெளியாவதை குறிப்பிட்டுள்ளார். ஒரு படத்தை திரையரங்கில் பார்ப்பதை விட வேறு எங்கும் சந்தோஷம் கிடைக்காது என டுவிட் செய்துள்ளார். அது தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. மொத்தத்தில், இந்த வருட பொங்கல் மாஸ்டர் பொங்கலாக அமைய போகிறது.

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top