வேகமெடுக்கும் டெலிவரி பாய்ஸ்|மக்களே உஷார்!
சில ஆண்டுகளுக்கு முன்னர், நாம் வாங்கும் பொருட்களை அது எதுவாக இருந்தாலும், கடைக்கு சென்று தான் வாங்கவேண்டும். ஆனால், தற்போது குண்டூசி முதல் கார் வரை இன்று அனைத்தையும், கைபேசி மூலமாக நாம் ஒரு நொடி பொழுதில் ஆர்டர் செய்து, அந்த பொருட்களை வீடு தேடி வரவழைகின்றோம்.
ஆரம்ப காலகட்டத்தில் டிவி, ஃபிரிஜ், வாஷிங்மிஷின் என இத்தகைய பொருட்களை வாங்குவோருக்கு மட்டும் இலவசமாகவோ அல்லது பணத்தை வாங்கிக்கொண்டோ டெலிவரி செய்துவந்தார்கள். அதன் பின்னர், உணவுவகையினை வீடுதேடி வந்து டெலிவரி செய்கின்றனர். தற்போது, நீங்கள் ஒரு குண்டூசியினை ஆர்டர் செய்தால் கூட இன்று வீடுதேடி டெலிவரி செய்கின்ற வசதிகள் வந்துவிட்டன.
ஒரு பொருட்களை வாங்க, நாலு கடை ஏறி இறங்கி எது நன்றாக இருக்கிறது, எது குறைவானதாகவும் அதே சமயத்தில் தரமாகவும் உள்ளது, என ஆராய்ந்து, சோதித்து பார்த்து மக்கள் அன்று கடைகளுக்கு நேரடியாக சென்று பொருட்களை வாங்கினார்கள். ஆனால், இன்று அப்படியில்லை பொருளை சோதிக்காது, தரத்தையும் மதிப்பீடு செய்யாது, விலை குறைவாக இருந்தால் போதும் என ஆன்லைனில் ஆர்டர் செய்கின்றார்கள்.
இதில், சிலர் ஏமாறுவதும்முண்டு. ஆம்..! நாம் ஒரு பொருட்களை ஆர்டர் செய்தால், டெலிவரி வரும் பொருட்கள், வேறமாதிரி வருகிறது. அதே போல், உணவு பொருட்களை ஆர்டர் செய்தால், சில டெலிவரி பாய்ஸ், அதனை திறந்து சில வற்றை சாப்பிட்டு, பின்னர், எப்படி பேக்கிங் செய்யப்பட்டதோ…அதே போல் பேக்கிங் செய்து டெலிவரி செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஸ்சோமாடோ, ஃபுட்பாண்டா, உபேர்ஈட்ஸ், ஸ்விக்கி, போன்ற முன்னணி நிறுவனர்கள் உணவுவகையினை தமிழ்நாட்டில் டெலிவரி செய்து வருகின்றன. மற்றவைக்கு, அமேசான் போன்ற பிற நிறுவனங்கள் உள்ளன. இப்போது, புதிய பிரச்சனையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. உணவு பொருட்களை, ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் வாடிக்கையாளரிடம், இந்த டெலிவரி பாய்ஸ் கொடுத்துவிடவேண்டும்.
இல்லை என்றால் வாடிக்கையாளருக்கு, அவரின் பணம் திருப்பி அளிக்கப்படும். இதில், ஏற்படும் நஷ்டத்தை டெலிவரி பாய்ஸ்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனால், டெலிவரி பாய்ஸ், தன் வாகனத்தை வேகமாக ஓட்டியும், சாலை விதிகளை மதிக்காதும், பிற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் டெலிவரி பாய்ஸ் வாகனங்களை ஓட்டிவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், இவர்களால் சென்னையில் அதிகளவில் விபத்துகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. தற்போதுள்ள, படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு இத்தகைய “டெலிவரி” வேலை வரமாக இருந்தாலும், நேர நிர்ணயம் காரணமாக வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்பட்டால், சாபமாக மாறிவிடும்மல்லவா?
ஆகையால், உணவினை டெலிவரி செய்யும் நிறுவனங்கள் இந்த நேர கட்டுப்பாட்டினை நீக்கினால், டெலிவரி பாய்ஸுக்கு இருக்கும் அபாயத்தை நீக்கலாம். அதே போல், இது சம்மந்தமாக ஆய்வுகளை மேற்கொண்டு, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நேர கட்டுப்பாட்டினை நீக்க கோரி, உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட வேண்டும்.
மேலும் படிக்க: