வேகமெடுக்கும் கொரோனா|தேர்தல் நேரத்தில் அச்சம்!

வேகமெடுக்கும் கொரோனா|தேர்தல் நேரத்தில் அச்சம்!

Coronavirus-in-India

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது புதிய பாதிப்பு 12 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. அதேசமயம், நாடு முழுவதும் குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

corona_virus_reuters

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.57 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 1.11 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,286 பேருக்கு தொற்று உறுதி; இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,11,24,527– ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 91 பேர் பலியான நிலையில், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,57,248 ஆக உயர்ந்துள்ளது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 12,464 பேர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 1,07,98,921– ஆக உயர்ந்துள்ளது.

* கொரோனா தொற்றுக்கு தற்போது 1,68,358 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 Coronavirus

* இந்தியாவில் இதுவரை 1,48,54,136 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

* குணமடைந்தோர் விகிதம் 97.07% ஆக குறைந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.41% ஆக குறைந்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.51% ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் இதுவரை 21,76,18,057 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

நன்றி:தினகரன்

 

மேலும் படிக்க: 

2ம் கட்ட தடுப்பூசி| யாரெல்லாம் போட்டுக்கொள்ளலாம்?

அரசு பேருந்துகளில் போஸ்டர் ஒட்டும் அதிமுக|அதிகாரம் துஷ்பிரயோகம்!

 

Follow us on :

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top